இந்தியாவில் அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மூன்று ஆசிரியர்கள் கைது!
இந்தியாவின் கிருஷ்ணகிரி பகுதியில் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயின்று வரும் 8-ஆம் வகுப்பு சிறுமிக்கு, அதே பள்ளியில் பணியாற்றி வரும் மூன்று ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். குறிப்பாக, ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததில் மாணவி கர்ப்பமடைந்ததாகவும், பின்னர் மாணவிக்கு கருக்கலைப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த சில […]