மத்திய கிழக்கு

புர்கினோ பசோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி!

  • May 14, 2023
  • 0 Comments

புர்கினா பாசோவின் மேற்கில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Mouhoun மாகாணத்தில் Youlou கிராமத்தில்  மௌஹூன் ஆற்றின் அருகே உள்ள வயல்களில் குடியிருப்பாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த பொழுது  தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண ஆளுநர் பாபோ பியர் பாசிங்கா இந்தத் தாக்குதலை “கோழைத்தனமானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது என விவரித்தார். தீவிரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஐரோப்பா

ரஷ்யாவின் இரு முக்கிய தளபதிகள் உயிரிழப்பு!

  • May 14, 2023
  • 0 Comments

பக்முத் நகரில் நடைபெற்ற போரில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்வரிசையில் போரிட்டு வந்த  இராணுவ மற்றும் அரசியல் பணிக்கான துணை இராணுவ கார்ப்ஸ் தளபதி கர்னல் யெவ்ஜெனி ப்ரோவ்கோ கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 4 வது மோட்டார் பொருத்தப்பட்ட துப்பாக்கி படையின் தளபதி கர்னல் வியாசெஸ்லாவ் மகரோவ் போர்க்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபோது கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.  

பொழுதுபோக்கு

STRஐ தவிக்க விடும் இயக்குனர்! ஹீரோயின் குறித்து தொடரும் சர்ச்சைகள்…

  • May 14, 2023
  • 0 Comments

தமிழில் கடைசியாக ‘பத்து தலை’ படத்தில் நடித்திருந்த சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் தனது அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “STR 48” என்று பெயரிடப்பட்டது, இதை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இருப்பினும், திரைப்பட தயாரிப்பாளர்கள் தீபிகா படுகோனை அணுகினார்களா என்பதை இன்னும் வெளியிடவில்லை. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த திரைப்படம் ஒரு இந்திய படமாக […]

பொழுதுபோக்கு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு!

  • May 14, 2023
  • 0 Comments

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பர்ஹானா’ திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் இயக்குனர் செல்வராகவன்,  ஜித்தன் ரமேஷ்,  கிட்டி,  அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘பர்ஹானா’ திரைப்படம் (மே 12) திரைக்கு வந்தது. இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை, தி.நகரில் உள்ள […]

பொழுதுபோக்கு

அன்னையர் தினத்தில் அன்னையாகினார் நடிகை அபிராமி!

  • May 14, 2023
  • 0 Comments

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். அபிராமியும் அவரது கணவர் ராகுலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர், மேலும் அவர்கள் தங்கள் சிறிய மகளுக்கு “கல்கி” என்று பெயரிட்டுள்ளனர். ஒரு புதிய அம்மாவாக அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைந்த அபிராமி, தனது பெண் குழந்தையுடன் எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் குறிப்பில், “அன்புள்ள நண்பர்களே, ராகுலும் நானும் இப்போது கல்கி என்ற பெண் குழந்தைக்கு பெற்றோர் […]

செய்தி

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘மார்க் ஆண்டனி’! ரிலீஸ் திகதி இதுவா?

  • May 14, 2023
  • 0 Comments

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கற்பனை மற்றும் காலப்பயணம், கேங்ஸ்டர் ஆக்‌ஷனாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியிடவில்லை […]

ஆசியா

பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய காலக்கெடு!

  • May 14, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்த நிலையில், துணை இராணுவ படையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 152 போலீசார் காயம் அடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். வன்முறை தொடர்பாக 2800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும்  கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கையில் இருந்து பிரான்ஸ் சென்ற முப்படை வீரர்கள் ஏழு பேர் மாயம்

  • May 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்விற்கு சென்ற இலங்கை முப்படை வீரர்கள் 7 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 CISM உலக இராணுவ டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை முப்படை வீரர்கள் ஏழு பேர் பிரான்சில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களில் நான்கு இராணுவ அதிகாரிகள், ஒரு கடற்படை அதிகாரி மற்றும் விமானப்படையைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 5ம் திகதி முதல் 9ம் திகதி […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு!

  • May 14, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.  இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென் கடந்த 2ஆம் திகதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கடுமையான மோதல் போக்கு நீடித்த […]

பொழுதுபோக்கு

சத்தமின்றி சாதனை படைத்த “குட் நைட்“

  • May 14, 2023
  • 0 Comments

சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் மக்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் நடிப்பில் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் காட்சிகள் அதிகப் படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் உ படம் இரண்டு நாளில் ரூபாய் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.