சிலிண்டர் விலை உயர்வு பெண்கள் ஒப்பாரி
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு .1,103-ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அதேபோல, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 350 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 2,119.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. […]