100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா
சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா, கம்போடியாவில் நடந்துவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்.
ஒரே தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் என இரு பந்தயங்களிலும் தங்கம் வென்ற முதல் சிங்கப்பூரரும் சாந்தி பெரேராதான்.
சாந்தி பந்தயத்தை 11.41 நொடிகளில் ஓடி முடித்தார்.
(Visited 7 times, 1 visits today)