அறிந்திருக்க வேண்டியவை

நிலவின் மிகத் தெளிவான புகைப்படம் வெளியானது!

  • May 13, 2023
  • 0 Comments

நிலவின் மிகத் தெளிவான புகைப்படத்தை ஆண்ட்ரூ மெக்கார்த்தி என்ற வானியற்பியலாளர் பகிர்ந்துள்ளார். பூமியில் இருந்து வானத்தை பார்க்கும்பொழுது நட்சத்திரங்கள், நிலா என மிகவும் அற்புதமாக இருக்கும். அதனை எப்பொழுது நாம் அருகில் சென்று பாப்போம் என்ற ஏக்கமும் வரும். இன்னும் சிலருக்கு அதனை புகைப்படம் எடுக்கும் ஆசையும் இருக்கும். அதேபோல, ஆண்ட்ரூ மெக்கார்த்தி என்ற வானியற்பியலாளர் ஒருவர் நிலவின் மிகத் தெளிவான புகைப்படத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் நிலவின் முழு அளவிலான புகைப்படத்தை உருவாக்க […]

இலங்கை

இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்கு புதிய நடைமுறை

  • May 13, 2023
  • 0 Comments

இலங்கையில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் புதிய திறமையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இதற்கிடையில், முன்கூட்டியே நியமனம் செய்தவர்கள் மாத்திரமே கடவுச்சீட்டைப் பெறுவதற்கு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 0707101060 அல்லது 0707101070 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் சந்திப்புகளை மேற்கொள்ளலாம். இதேவேளை, நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் வெளிநாடு […]

பொழுதுபோக்கு

‘நீங்கள் தான் தீவிரவாதி” கங்கனா ரணாவத் அதிரடி

  • May 13, 2023
  • 0 Comments

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கணிசமான வசூலை பெற்று வருகிறது. இப்படம் திரையிட்ட இடங்களில் ஓரளவுக்கு வசூலை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருபவர்களை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:- இப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை தடை செய்ய வேண்டும் என பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஆதரவு அளித்துள்ளது […]

இலங்கை

கல்வித்துறையை நவீனமயப்படுத்த ஜனாதிபதி ரணில் திட்டம்!

  • May 13, 2023
  • 0 Comments

இலங்கையில் கல்வித்துறையை நவீனமயப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் பத்து ஆண்டுகளில் கல்வித்துறையை நவீனமயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவ சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையை நவீனமயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற திறன் மற்றும் தொழில் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட […]

ஐரோப்பா

உலகிற்கு ஆபத்தாகும் செயற்கை நுண்றிவு – வேலை பறிப்போகும் அபாயத்தில் கோடி கணக்கானோர்

  • May 13, 2023
  • 0 Comments

உலகிற்கு ஆபத்தாகும் செயற்கை நுண்றிவினால் கோடி கணக்கானோர் பாதிக்கப்படவுள்ளனர். செயற்கை நுண்றிவு தொழில் நுட்பத்தினால் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி உலக பொருளாதார மன்றம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வேலை வாய்ப்புகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் சுவிட்சர்லாந்தின் கால்ஜினி நகரை தலைமையகமாக கொண்ட உலகப் பொருளாதார மன்றம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் உள்ள மொத்த வேலை வாய்ப்புகளில் 23 சதவீதம் வரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் பாதிப்படையும் என்று […]

உலகம்

இத்தாலி மக்களிடம் போப் பிரான்சிஸ் விடுத்துள்ள கோரிக்கை

  • May 13, 2023
  • 0 Comments

இத்தாலி மக்களிடம் போப் பிரான்சிஸ் விடுத்துள்ள கோரிக்கை இத்தாலிய இளைய தம்பதியினர் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இத்தாலியில் குழந்தைகள் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிதும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் பணி சுமை, பொருளாதார சூழல்கள் காரணமாக இளைய தம்பதியினர் குழந்தைகளை பெற்று கொள்வது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தாலியில் கடந்த ஆண்டில் 4 லட்சம் குழந்தைகளே பிறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து 2033ம் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் வாட்டி வதைக்கும் வெப்பநிலை – அமுலாகும் தடை

  • May 13, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் வெப்பநிலை அங்கு 39 டிகிரி செல்சியஸுக்கு மேல் கூடினால் வேலைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்பநிலையால் வெளிப்புற வேலைகள் சிலவற்றுக்குத் தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஸ்பெயினின் தேசிய வானிலை அமைப்பு மோசமான வெப்பநிலை குறித்த எச்சரிக்கையை விடுக்கும்போது சில வெளிப்புற வேலைகள் நிறுத்தப்படும். சாலைகளைத் துப்புரவு செய்தல், கட்டுமானப் பணிகள், விவசாயம் ஆகியவை அவற்றுள் அடங்கும். நாட்டின் சில பகுதிகள் தொடர் வறட்சியால் கடுமையான […]

ஐரோப்பா

புகைப்பிடிக்காத தலைமுறை – ஐரோப்பிய நாடு ஒன்றின் அதிரடி நடவடிக்கை

  • May 13, 2023
  • 0 Comments

போர்ச்சுகலில் புகைப்பிடிப்பதைத் தடை செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது. பாடசாலைகள் மருத்துவமனைகள், மூடப்பட்ட வெளிப்புற இருக்கைகள் கொண்ட இடங்கள் ஆகியவற்றில் இதனை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மனுவேல் பிஸ்ஸாரோ (Manuel Pizarro) அது குறித்துப் பேசினார். உட்புறங்களில் புகைப்பிடிப்பதைத் தடை செய்வதும் புதிய சட்டத்தில் அடங்கும். 2025ஆம் ஆண்டிலிருந்து புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்படும் இடங்களில் புகையிலை பொருள்களின் விற்பனை தடை செய்யப்படும். புதிய சட்டம், இளையர்களுக்குப் புகையிலை இல்லாத சுற்றுப்புறத்தை அமைத்துக் கொடுக்கவும், புகைப்பிடிப்பவர்கள் […]

ஆசியா

சிங்கப்பூரில் அச்சுறுத்தும் ஆபத்து – மூவர் பாதிப்பு

  • May 13, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மூவருக்கு Zika வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர் அவர்கள் Kovan வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாகும். பாதிக்கப்பட்ட மூவரில் இருவர் வீட்டிலேயே குணமடைந்து வருகின்றனர். எஞ்சிய ஒருவர் மருத்துவமனையில் இருக்கிறார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. தொற்றுக்கு ஆளான மூவரில் எவருமே கர்ப்பிணி அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. கோவன் வட்டாரத்தில் வசிப்பவர்கள் அல்லது வேலை செய்வோரிடம் ஸீக்கா பரிசோதனை செய்யும்படிச் சுகாதார அமைச்சு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியது. தேசியச் சுற்றுப்புற அமைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் […]

ஐரோப்பா

பிரான்ஸில் தங்குமிடம் கோரிய அகதிகள் கைது!

  • May 13, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 15 பேர் வரையான அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக அகதிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று கண்டனம் வெளியிட்டுள்ளது. தங்குமிடம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை இரவு பரிசில் உள்ள நகரசபைக் கட்டிடத்துக்கு முன்பாக குவிந்த 150 வரையான அகதிகள், ‘அவசரகால தங்குமிடம்’ கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது ஆர்ப்பாட்டம் பொது போக்குவரத்தினை பாதித்ததாக தெரிவிக்கப்பட்டு அவர்களில் 15 அகதிகள் கைது செய்யப்பட்டனர். அகதிகள் கைது செய்யப்பட்டமைக்கு Nikolaï Posner எனும் அகதிகள் […]