இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

  • May 5, 2023
  • 0 Comments

இலங்கையில் கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இக்காலநிலை இன்றும் தொடரக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக பதுளை ,  திருகோணமலை,  இரத்தினபுரி,  கேகாலை,  யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு,  புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கபட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் […]

ஐரோப்பா

ஜெலன்ஸ்கி தொடர்பில் லீக்கான இரகசிய செய்தி ; ஜேர்மன் பொலிஸில் பெரும் பரபரப்பு

  • May 5, 2023
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி தொடர்பிலான இரகசிய செய்தி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, ஜேர்மன் பொலிஸில் பரபரப்பு உருவாகியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இம்மாதம் ஜேர்மன் தலைநகரான பெர்லினுக்கு வருகை புரியும் இரகசிய திட்டம் ஒன்று உள்ளதாம்.ஆனால், அந்த செய்தி உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகிவிட்டது. ஜேர்மன் ஜனாதிபதியின் வருகை குறித்து இதுவரை யாருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் கொடுக்காத நிலையில், பொலிஸாருக்கு மட்டுமே தெரிந்த அந்த தகவல் ஊடகங்களுக்கு லீக்கானதால் ஜேர்மன் பொலிஸில் பரபரப்பு உருவாகியுள்ளது. பொலிஸ் துறையில் […]

ஆப்பிரிக்கா

சூடானில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : 440 மில்லியன் தேவைப்படுவதாக ஐ.நா தெரிவிப்பு!

  • May 5, 2023
  • 0 Comments

சூடானில் வெடித்துள்ள உள்நாட்டு கலவரம் காரணமாக அங்கிருந்து பெருமளவானோர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், அவர்களை தங்கவைக்க 445 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ஐநா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. “சூடான் மற்றும் அதைச் சுற்றியுள்ள மனிதாபிமான நிலைமை சோகமானது என்றும்,  உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் அடிப்படை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது” என்றும் UNHCR  வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 860,000 என்பது நிதி […]

ஆசியா

பாக். வெளியுறவு மந்திரி கோவா வருகை ; நல்லிணக்க அடிப்படையில் 600 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு

  • May 5, 2023
  • 0 Comments

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு (மே 4,5) இரு தினங்கள் கோவாவில் நடைபெற்று வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில் உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் […]

ஐரோப்பா

பர்கரில் எலிக்கழிவு ; 5 கோடி அபராதம் வழங்கும் மெக்டொனால்ட்ஸ்!

  • May 5, 2023
  • 0 Comments

வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பர்கர் உணவில் எலிக்கழிவு இருந்ததால் பெண்ணொருவருக்கு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ரூ.4.8 கோடி அபராதம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை பரப்பி பர்கர், ப்ரைஸ் போன்ற துரித உணவுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் ரெஸ்டாரென்ட் கிளை ஒன்று பிரிட்டன் நாட்டின் கிழக்கு லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோன் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு பெண் […]

உலகம் மத்திய கிழக்கு

ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் சவுதி அரேபியா!

  • May 5, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு  ஆசிய நாடுகளுக்கு கடந்த நான்கு மாதங்களில் முதல் முறையாக எண்ணெய் விலையை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ வெளியிட்டுள்ள தகவலின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி வரும் ஜுன் மாதம்,  அரபு லைட் கிரேடு எண்ணெய் ஏற்றுமதி விலை மே மாதத்துடன் ஒப்பிடும்போது பீப்பாய்க்கு 25 செண்ட் என்ற […]

இந்தியா

நில தகராரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொலை; அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் !

  • May 5, 2023
  • 0 Comments

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 பெண்கள் உட்பட ஒ‍ரே குடும்பத்‍தைச் சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணித் தகராறு காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவர்கள் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தின் லேபா கிராமத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கு இடையிலான காணித் தகராறு காரணமாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட ஒரே […]

ஐரோப்பா

சிறையில் இருந்த கொடூர குற்றவாளியுடன் உல்லாசம் ; சிறை பெண் ஊழியர் கைது!

  • May 5, 2023
  • 0 Comments

இங்கிலாந்து நாட்டில் 2021 ஆம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண்ணை கொள்ளையடித்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர். இந்தப் படுகொலை பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த வழக்கில் குற்றசாடப்பட்ட ஜோர்டான், ‘எந்தவொரு பெண்ணுக்கும் ஆபத்து’ என்று வர்ணிக்கப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றத்தால் அவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜோர்டான் தென் கிழக்கு லண்டனின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஹைடெக் சிறைச்சாலையில் […]

இந்தியா

சூடானில் இருந்து முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு!

  • May 5, 2023
  • 0 Comments

சூடான் நாட்டில் கடந்த மாதம் 15 ஆம் திகதி  முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்த பணியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 16 விமானங்கள் மற்றும் 5 போர் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மீட்கப்படும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியா […]

ஐரோப்பா

ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

  • May 5, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உக்ரைன் முதன்முறையாக  சுட்டு வீழ்த்தியதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை கிய்வ் மீது ஏவப்பட்ட Kh-47 Kinzhal ஏவுகணையிலிருந்து சிதைந்த புகைப்படங்கள் கிடைத்ததாகக் உக்ரைனிய செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. Kinzhal ஏவுகணை 3,000km (1,900 மைல்கள்) வேகத்தில் மணிக்கு 2.5 கிலோ மீற்றர் பயணிக்கும் என ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது என்பதுடன்,  குண்டுவீச்சுகள் அல்லது இடைமறிப்புகளால் ஏவப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Skip to content