இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!
இலங்கையில் கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இக்காலநிலை இன்றும் தொடரக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பதுளை , திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கபட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பதுளை காலி , கேகாலை, மாத்தளை, மாத்தறை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)