இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் எரிபொருள் விலை மேலும் குறைவடைவதற்கான சாத்தியம்!

  • May 6, 2023
  • 0 Comments

இலங்கையில் எரிபொருளுக்கான விலை மேலும் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைப்  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடனும் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இது குறித்து ஊகடங்களிடம் கருத்து வெளியிட்ட வலுசக்தி அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ‘எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதற்காக மூன்று நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளதாகவும்,  அதில் இரண்டு நிறுவனங்கள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்துக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதால் […]

செய்தி தமிழ்நாடு

மாடு பிடி வீரருக்கு ஒரு கிலோ தங்கமா..?

  • May 6, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாந்த்தம் புதுப்பட்டி பெரிய கருப்பர் கோவில் சித்திரை திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை திருச்சி மதுரை ராமநாதபுரம் சிவகங்கை தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. சுமார் 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் என ஆறு சுற்றுகளாக மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தும் துள்ளி குதித்தும் வரும் காளைகளை ஆர்வமுடன் அடக்கி […]

ஐரோப்பா

ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் புதிய திட்டம்!

  • May 6, 2023
  • 0 Comments

உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன. எனவே ராணுவத்தை பலப்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் டிரோன்களின் ராணுவம் என்ற திட்டத்தை தொடங்க போவதாக உக்ரைன் அரசாங்கம் திட்டமிட்டது. அதன்படி இந்த திட்டமானது உளவு டிரோன்களை பெருமளவில் வாங்குவதற்காகவும்,  ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் தொடங்கப்பட்டது. அதன் […]

செய்தி தமிழ்நாடு

பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை

  • May 6, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையிலான ஒரு நபர் ஆணையம்,வேங்கை வயல் கிராமத்தில் மலம் கலந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு பின்னர் பொதுமக்களை சந்தித்து எந்தவித குறைகளையும் கேட்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வு கூட்டத்திற்காக புறப்பட்டு சென்றார். பொதுமக்களிடம் விசாரணை செய்வதற்காக வேங்கை வயல் அரசு பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதி […]

ஐரோப்பா

”Not my King” – மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவில் போராட்டம்!

  • May 6, 2023
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழா இன்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில்,  “நாட் மை கிங்” என்ற பலகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டக்காரர்கள், ஊர்வலப் பாதையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அறியமுடிகிறது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் பொலிஸார் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் உலோகத் தடைகளைத் தாண்டாமல், பலகைகளை மட்டும் ஏந்தியபடி இருந்ததாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை

QR குறியீட்டு முறை நீக்கம் தொடர்பில் வெளியான செய்தி

  • May 6, 2023
  • 0 Comments

எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதற்காக மூன்று நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளன. அதில் இரண்டு நிறுவனங்கள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன. விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்துக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதால் போட்டித்தன்மை அதிகரிக்கும். எனவே எரிபொருட்களின் விலைகள் மேலும் குறைவடையும். அத்தோடு தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான வாய்ப்புக்களும் உருவாகும் என்றார். மேலும், QR குறியீட்டு முறைமையை நீக்குவது தொடர்பில் இறுதி […]

ஐரோப்பா

குளியலறையில் கேட்ட சத்தம்; பிரித்தானிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

  • May 6, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள தன் அத்தை வீட்டுக்குச் சென்றிருந்த ஒரு பிரித்தானிய இளம்பெண், குளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென உயிரிழந்த சம்பவம், அவரது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பிரித்தானிய இளம்பெண்ணான ரியா (19), பாரீஸிலுள்ள தன் அத்தை வீட்டுக்கு விடுமுறைக்காக சென்றிருக்கிறார்.ஒருநாள் ரியா குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும்போது,ஏதோ பலத்த சத்தம் கேட்கவே, அவரது அத்தை ஓடோடிச் சென்று என்ன நடந்தது என்று பார்த்திருக்கிறார். அப்போது, குளியலறையில் ரியா சுயநினைவில்லாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோன அவரது அத்தை உடனடியாக அவசர உதவியை அழைத்திருக்கிறார்.விரைந்து […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையின் அணிசேரா கொள்கையை நாம் மதிக்கிறோம் – ரஷ்யா!

  • May 6, 2023
  • 0 Comments

இலங்கை அரசாங்கம் தற்போது பின்பற்றுகின்ற அணிசேரா கொள்கையை நாம் மதிப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.டகர்யான் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின்போது உயிர் நீத்த ரஷ்ய இராணுவத்தினரை நினைவுகூரும் வகையில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தினால் தேசிய பொது நூலகத்துக்கருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கருகில்  நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதி்ல் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை எதிர்கொண்டு உயிர் நீத்த இராணுவ வீரர்களை […]

செய்தி தமிழ்நாடு

உளவுத்துறை எச்சரிக்கை சட்ட ஒழுங்கு ஏற்படும்

  • May 6, 2023
  • 0 Comments

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் “டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம் பெண்கள் மாயமாவது போன்றும் அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன, இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன, கேரள முதல் மந்திரி பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதை அடுத்து இந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்க-மெக்சிகோ எல்லை திறக்கப்படாது; பைடன் நிர்வாகம் தீர்க்கம்

  • May 6, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கொரோனா பரவலின்போது, தொற்று ஏற்பட்டவர்கள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டின் எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. அவர்களை அப்படியே உடனடியாக திருப்பி அனுப்பும்படி எல்லை படை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. டிரம்ப் அரசில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பைடன் அரசாங்கம் வந்த பின்னர் இந்த விதிகளில் வருகிற 11ம் திகதிக்கு பின்னர், தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க-மெக்சிகோ எல்லை திறக்கப்பட்டால், எண்ணற்ற புலம்பெயர்வோர் அமெரிக்காவில் நுழைய கூடிய சாத்தியம் உள்ளது. இதனால், […]

Skip to content