இந்தியா

தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுக்க ஆசைப்பட்டு பலியான சிறுவன் (வீடியோ)

  • May 9, 2023
  • 0 Comments

தெலுங்கானாவில் தண்டவாளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க சென்ற சிறுவன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சர்பாராஸ் என்ற 16 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மீது மோகம் கொண்டுள்ளார்.சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு வெளியிட்டு அதில் பிரபலம் அடைவதை விரும்பிய சர்பாராஸ், ரீல்ஸ் எடுக்க முயன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த புதன் கிழமையன்று மதிய வேளையில் தன் பெற்றோரிடம் தொழுகைக்கு செல்கிறேன் என கூறி விட்டு நண்பர்களுடன் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியுள்ள 92 ஆயிரம் இலங்கையர்கள்!

  • May 9, 2023
  • 0 Comments

இலங்கியில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக தமிழகத்தில் சுமார் 92 ஆயிரம் இலங்கையர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், 92435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது வெளியேயோ தங்கியுள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதி முகாம்கள் இயங்கி வருவதாகவும் அதில், 19046 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 435 பேர் தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். […]

பொழுதுபோக்கு

தமிழ் மக்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகர் பாத்திரம் கழுவுகின்றார்!! காரணம் தெரியுமா?

  • May 9, 2023
  • 0 Comments

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பனாகவும் நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் தொடர்பில் செய்தி வெளியாகி உள்ளது. இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். மேலும் பொற்கோவிலில் நேர்த்திக்கடனின் ஒரு பகுதியாக அங்குள்ள பாத்திரங்களை சுத்தப்படுத்தும் இடத்திற்கு சென்று மணலால் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து சேவையும் செய்துள்ளார் வித்யுத் ஜாம்வால். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி […]

செய்தி தமிழ்நாடு

நாய் உறவினர்களை தேடி அலையும் சோகம்

  • May 9, 2023
  • 0 Comments

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியூருக்கு செல்ல குடும்பத்துடன் வந்த உறவினர்களுடன் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று அவர்களுடனே வந்துள்ளது. அதனை பொறுப்பெடுத்தாமல் பேருந்து நிலையத்திலேயே விட்டு விட்டு அவர்கள் குடும்பத்துடன் வெளியூருக்கு பஸ் ஏறிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பேருந்தில் ஏறிச் சென்றதைக் கண்ட அந்த நாய் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருக்கும். பஸ்களிலும் வரும் பஸ்களிலும் […]

ஆசியா

கனடாவின் நடவடிக்கைக்கு பதிலடி; அந்நாட்டு தூதரை வெளியேற்றிய சீனா

  • May 9, 2023
  • 0 Comments

கனடா மற்றும் சீனா இடையே கடந்த 2018ம் ஆண்டு முதல் பதற்ற நிலை காணப்படுகிறது. சீனாவின் ஹூவாவெய் பகுதியை சேர்ந்த முக்கிய நபரை கனடா கைது செய்தது. இதற்கு பதிலடியாக சீனாவும், கனடா நாட்டை சேர்ந்த 2 பேரை தனது நாட்டில் வைத்து கைது செய்தது.அவர்கள் 3 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவின் கொள்கையை கனடா பின்பற்றுகிறது என கூறி தொடர்ந்து அந்நாடு மீது சீனா குமுறலை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சீனாவில் ஜின்ஜியாங் […]

ஐரோப்பா

புட்டினின் ‘பவர் பிளேக்களுக்கு ஐரோப்பா பயப்படக்கூடாது – ஜெர்மன் தலைவர்!

  • May 9, 2023
  • 0 Comments

புட்டினின் ‘பவர் பிளே’களால் ஐரோப்பா பயப்படாது  என ஜேர்மன் தலைவர் Olaf Scholz, தெரிவித்துள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு முயற்சிகளை மிக நெருக்கமாக ஒருங்கிணைக்க வே்ண்டும் எனத் தெரிவித்தார். வடகிழக்கில் புடின் 2200 கிலோமீற்றர் தொலைவில், தனது வீரர்கள், டாங்கிகள், மற்றும் ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளார். ஆகவே பாதுகாப்பு தொழில்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். உக்ரைனுக்கான வெடிமருந்துகளை கூட்டாக வாங்க வேண்டும். […]

ஆசியா

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது- பாகிஸ்தானில் பதற்ற நிலை

  • May 9, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பிடிஐ தலைவருமான இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டார். இம்ரான்கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் அவரை கைது செய்துள்ளனர். நீதிமன்றம் வெளியே வைத்து பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இம்ரான்கானை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவம், உளவு அமைப்புகள் குறித்து அவதூறாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில், வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாலம்!

  • May 9, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் மோட்டார் பாதை பாலம் ஒன்று வெடி வைத்து  தகர்க்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 7ம் திகதி  அன்று ஜெர்மனியின் லுடென்ஷெய்டில் உள்ள 450 மீட்டர் நீளமுள்ள ரஹ்மேட் பள்ளத்தாக்கு பாலம் சில நொடிகளில் இடிந்து விழுந்தது. 1965 மற்றும் 1968 க்கு இடையில் கட்டப்பட்ட பாலத்தை தகர்ப்பதற்கு சுமார் 150 கிலோ வெடிபொருட்கள் தேவைப்பட்டன. இதைதவிர  அண்டை கட்டிடங்களை பாதுகாக்க ஒரு தடையை உருவாக்க 50 அடுக்கப்பட்ட கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கிடையில் தாக்கத்திலிருந்து சேதத்தைத் […]

ஐரோப்பா

வெற்றி விழாவில் அதிபர் புதின் சொன்ன அந்த ஒரு வார்த்தை., உற்று நோக்கும் உலக நாடுகள்

  • May 9, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் வெற்றி விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போர் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், மேற்கத்திய நாடுகளையும் அவர் கடுமையாகச் சாடினார். இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. உண்மையில் இதை ரஷ்யா துளியும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோபமும் இப்போது அதிகரித்து வரும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க புதின் பல முயற்சிகளை எடுத்து […]

ஆசியா

பாகிஸ்தானில் விபத்தில் சிக்கிய வேன் : இருவர் உயிரிழப்பு!

  • May 9, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் ஸ்வாட் பகுதியில் வேன் ஒன்று விபத்துகுள்ளானதில் அதில் பயணித்த 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கபால் என்ற இடத்துக்கு அருகே வேன் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Skip to content