வட அமெரிக்கா

அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையின் காவலில் இருந்த 8 வயது புலம்பெயர்ந்த சிறுமி மரணம்

  • May 18, 2023
  • 0 Comments

டெக்சாஸில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினரின் காவலில் இருந்த 8 வயது புலம்பெயர்ந்த சிறுமி உயிரிழந்தார். புதன்கிழமை டெக்சாஸில் அமெரிக்க எல்லை ரோந்து படையினரின் காவலில் இருந்தபோது மருத்துவ அவசரநிலை காரணமாக 8 வயது சிறுமி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுமியும் அவரது குடும்பத்தினரும் மெக்ஸிகோ எல்லைக்கு அடுத்துள்ள ஹார்லிங்கன் நகரில் உள்ள ஒரு புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்க வைக்கப்பட்திருந்தனர் என்று சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிறுமியின் அடையாளம் குறித்த கூடுதல் […]

ஐரோப்பா

பின்லாந்திற்கு தப்பிச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள்!

  • May 18, 2023
  • 0 Comments

ஆயிரத்திற்கும்  மேற்பட்ட ரஷ்யர்கள் பின்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தப்பிச் சென்றுள்ளவர்களை என்ன செய்வது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிக்காட்டுதலுக்காக நாடு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இராணுவக் கடமைகளைத் தவிர்ப்பதற்காக இதுவரை மொத்தம் 1,109 ரஷ்ய குடிமக்கள் பின்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஃபின்லாந்து குடிவரவு சேவை தெரிவித்துள்ளது. தஞ்சம் அடைவது பற்றி எந்த முடிவும் எடுப்பதற்கு முன், கட்டாய ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய ரஷ்யர்களின் தலைவிதி குறித்து  ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை பின்லாந்து […]

இலங்கை

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இணக்கம்!

  • May 18, 2023
  • 0 Comments

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25வது அமர்வின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. […]

பொழுதுபோக்கு

காதல் காவியமான “அலைகள் ஓய்வதில்லை”!! 42 வருடங்களின் பின் ரகசியம் வெளியானது

  • May 18, 2023
  • 0 Comments

பாரதிராஜா தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனர்களில் ஒருவர், மேலும் பல்வேறு வகைகளில் பல பிளாக்பஸ்டர் வெற்றிகளை வழங்கியவர். ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் இயக்குனரின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும், மேலும் இந்த படம் ஒரு இந்து ஆணுக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையிலான இளமை காதலைக் கொண்டு நகர்கின்றது. பாரதிராஜா தனது சமீபத்திய பேட்டியில் இப்படம் பற்றி மனம் திறந்து ரசிகர்களிடம் ஒரு ரகசியத்தை பகிர்ந்துள்ளார். பாரதிராஜா தனது விருப்பமான காதல் கதையான ‘அலைகள் ஒய்வதில்லை’ என்ற படத்தில் மதம் […]

இலங்கை

மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை ஏற்க முடியாது………!

  • May 18, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் மின்சாரக் கட்டணத்தை 3மூ குறைப்பதற்காக இலங்கை மின்சார சபை பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (வியாழக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா

55 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரித்தானியாவின் தொலை தொடர்பு நிறுவனம்!

  • May 18, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் டெலிகொம் கம்பனி, தசாப்தத்தின் இறுதிக்குள் 55 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் தொலைதொடர்பு நிறுவனமாக BT குரூப் செலவினங்களைக் குறைப்பதற்காகவும், மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாகவும் மேற்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. BT நிறுவனத்தில், ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில், 2030 ஆம் ஆண்டுகள் சுமார் 75 ஆயிரம் தொடக்கம் 90 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை நிர்வாக […]

வட அமெரிக்கா

அமேசான் காட்டில் விழுந்து நொறுங்கிய விமானம்: 2 வாரங்களுக்கு பிறகு 4 குழந்தைகள் கண்டுபிடிப்பு

  • May 18, 2023
  • 0 Comments

கொலம்பியாவில் உள்ள Huitoto பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள், அவர்கள் பயணம் செய்த விமானம் அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, கொலம்பியாவில் அமேசான் காட்டில் ஒரு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அதிசயமாக 11 மாத குழந்தை உட்பட 4 குழந்தைகள் உயிர் பிழைத்தனர்.விபத்தில் உயிர் தப்பியது அதிசயம் என்றாலும், ஆனால் விபத்து […]

பொழுதுபோக்கு

‘தலைவர் 171’ படத்தில் இணையும் இமாலய கூட்டணி!! மிஷ்கின் உறுதிப்படுத்தினார்

  • May 18, 2023
  • 0 Comments

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் விரைவில் இளம் இயக்குனருடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘தலைவர் 171’ படத்தின் போட்டோஷூட் இந்த மாத தொடக்கத்தில் நடந்ததாக செய்திகள் வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லோகேஷ் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதை இயக்குனர் மிஷ்கின் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் […]

ஐரோப்பா

கிரிமியா தலைநகர் பகுதில் ரயில் சேவைகள் நிறுத்தம

  • May 18, 2023
  • 0 Comments

கிரிமியாவில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதை அடுத்து  ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கிரிமியாவின்  தலைநகரான சிம்ஃபெரோபோல் மற்றும் செவஸ்டோபோல் நகருக்கு இடையேயான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக  பிராந்தியத்தின் ரஷ்ய தலைவர் கூறினார். இதேவேளை இந்த வெடிப்பு சம்பவத்தில், தானியங்கள் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிமியா 2014 இல் ரஷ்யாவால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டது.  உக்ரைன் அதை திரும்பப் பெற போராடுவதாகக் கூறியது, இருப்பினும் இது மிகவும் […]

ஐரோப்பா

மால்டோவா இனி ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தாது என அறிவிப்பு!

  • May 18, 2023
  • 0 Comments

மால்டோவா இனி ரஷ்யாவின் இயற்கை எரிவாயு, அல்லது மின்சாரத்தை பயன்படுத்தாது என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் அண்டை நாடான மால்டோவாதன் ரஷ்யாவின் அடுத்த இலக்கு என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், மால்டோவா இயற்கை எரிவாயு கொள்வனவில், ரஷ்யாவை தான் 100 வீதம் நம்பியுள்ளது. இந்த சூழலில், புக்கரெஸ்டில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டோரின் ரீ சியன், மால்டோவா இனி ரஷ்யாவின் இயற்கை எரிவாயு, அல்லது மின்சாரத்தை பயன்படுத்தாது என அறிவித்தார். இது தொழில்நுட்ப […]

Skip to content