இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு – இலங்கை மின்சார சபை அறிவிப்பு
இலங்கை மின்சார வாரியம் (CEB) இன்று மற்றும் நாளை திட்டமிடப்பட்ட மின்வெட்டு அறிவித்துள்ளது, தலா ஒன்றரை மணிநேரம் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, பிற்பகல் 3.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் இந்த சுழற்சி முறையிலான மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.