உலகம்

பென்சிலோனியாவில் துப்பாக்கிச் சூடு : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

  • June 1, 2023
  • 0 Comments

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாக திகழும் பென்சிலோனியாவில், மர்மநபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் பெயர் ஜோசுபா லூசோ (வயது19) ஜீசஸ் பெரோஸ் (8) ஜெபாஸ்டியான் (9) என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தி […]

ஆசியா

பூமியின் மேற்பரப்பில் இருந்து 32 ஆயிரம் அடி வரை துளையிடும் சீனா…!

  • June 1, 2023
  • 0 Comments

உலகின் வளர்ந்த நாடுகளின் ஒன்றான சீனா, விண்வெளி ஆய்வுக்கு மத்தியில் பூமிக்கு அடியில் புதிய எல்லைகளை ஆராயும் பணிகளை தொடங்கியுள்ளது. அதாவது பூமியின் மேற்பரப்பில் இருந்து 10,000 மீட்டர் (32,808 அடி) வரை துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். இந்த பணியை சீனா கடந்த செவ்வாயன்று நாட்டின் எண்ணெய் வளம் மிக்க பகுதியான ஜின்ஜியாங் பகுதியில் தொடங்கியுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளது. அறிக்கையின்படி, பூமியின் மேற்பரப்பில் துளையிடும் பணிகள் 10க்கும் மேற்பட்ட கண்ட […]

இலங்கை

இலங்கையில் பேருந்து கட்டணங்கள் குறைவடைய வாய்ப்பு!

  • June 1, 2023
  • 0 Comments

பேருந்து கட்டணங்களை குறைப்பது குறித்து ஜூலை மாதம் ஆராய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற எரிபொருள் கட்டண குறைப்பை அடிப்படையாக கொண்டு பேருந்து கட்டணங்களை குறைப்பது குறித்து ஆராயலாம் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் டீசல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள கெமுனு விஜயரட்ண ஜூலை 1ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்டண மறு ஆய்வின்போது இந்த நன்மையை பொதுமக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

ஐரோப்பா

தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!

  • June 1, 2023
  • 0 Comments

அனைத்து உக்ரேனிய துறைமுகங்களுக்கும் கப்பல்களை பதிவு செய்வதை ரஷ்யா தடுத்துள்ளதால், ஐ.நா-வின் தரகு கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் சீரமைப்பு அமைச்சகம் இன்று  (01) தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைனின் சீரமைப்பு அமைச்சகம்  பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  இஸ்தான்புல்லில் உள்ள கூட்டு ஒருங்கிணைப்பு மையம், முன்முயற்சியில் பங்கேற்பதற்காக உள்வரும் கடற்படையை பதிவு செய்ய,  ரஷ்ய தூதுக்குழுவின்  மறுப்பு காரணமாக  ஆய்வுத் திட்டத்தை வரைவது சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளது. இது  குறித்து ரஷ்யா […]

பொழுதுபோக்கு

கையில் குருவிக் கூட்டுடன் ஹீரோவாக வருகின்றார் பிக் பாஸ் கதிரவன்….

  • June 1, 2023
  • 0 Comments

தமிழ் தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ். ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு வித்தியாசமான கேம் ஷோ. பல போட்டியாளர்களுக்கு திரையுலகில் பெரிய சலுகைகளை வழங்க உதவியுள்ளது. கவின், ரைசா மற்றும் லாஸ்லியா ஆகியோர் பிக்பாஸில் வெற்றி பெற்ற பிறகு கோலிவுட்டில் நுழைந்தனர். தற்போது பிக்பாஸ் 6 போட்டியாளர் கதிரவன் முன்னணி நடிகராக களமிறங்க உள்ளார். சமீபத்தில் அவரது முதல் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். கதிரவனின் ஜாயல் […]

ஐரோப்பா

பிரித்தானிய விமானத்தின் கழிவறையிலிருந்து வெளியேறிய புகை; பயணிகளை உறையவைத்த சம்பவம்

  • June 1, 2023
  • 0 Comments

பிரித்தானியாவுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் திடீரென கழிவறையிலிருந்து புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செவ்வாய்கிழமை (30) ஸ்பெயினின் பால்மா நகரத்திலிருந்து புறப்பட்டு பிரித்தானியாவில் மான்செஸ்டர் நகரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த RyanAir-ன் RK 3442 விமான இந்த சம்பவம் நடந்தது.விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களில், கேபின் கழிவறையிலிருந்து புகை வருவதைப் பார்த்த விமானப் பணிப்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். கழிவறை கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருப்பதை அறிந்த பின்னர் பயணிகளை சரிபார்த்தபோது, ஒருவர் உள்ளே ஒருவர் புகைபிடித்துக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.அவரது பெயர் மற்றும் […]

பொழுதுபோக்கு

புதுப்பொழிவுடன் மீண்டும் வருகின்றான் “எந்திரன்”!!

  • June 1, 2023
  • 0 Comments

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிய எந்திரன் இரண்டாம் பாகமும் நல்ல இடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில் ‘எந்திரன்’ திரைப்படம் மீண்டும் ஜூன் 9ம் திகதி வெளியாகவுள்ள செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k ULTRA HD தரத்தில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் ஜூன் […]

இலங்கை

இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

  • June 1, 2023
  • 0 Comments

இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்தின் வர்த்தகர்கள்,  தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார். பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் தாய்லாந்தின் தொழில் கூட்டமைப்பு,  தாய்லாந்தின் சுற்றுலா கவுன்சில்,  தாய்லாந்தின் முதலீட்டு சபை,  தாய்லாந்தில் உள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனம் மற்றும் தாய்லாந்தின் வர்த்தக சம்மேளனம் உள்ளிட்டவற்றின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையில் முதலீடு செய்யும் போது தமது பொருட்களை விற்பனை செய்வதற்கு வரிச்சலுகைகள் […]

ஐரோப்பா

கீவ் நகரின் சாலையில் திடீரென பறந்து வந்த ஏவுகணையின் துண்டு

  • June 1, 2023
  • 0 Comments

ரஷ்ய ஏவுகணையில் இருந்து உடைந்த சிறு பகுதி ஒன்று, உக்ரைன் தலைநகர் கீவ்வில், சாலையில் சென்று கொண்டிருந்த காருக்கு அருகே விழுந்ததால் மக்கள் கீவ் அச்சமடைந்தனர். நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென பறந்து வந்த ஏவுகணையின் துண்டு, வெள்ளை நிற காருக்கு அருகில் விழுந்து நொறுங்கியது. அதேவேளை ரஷ்ய ஏவுகணை இலக்கை நெருங்குவதற்கு முன்னதாகவே இடைமறித்து அழித்துவிட்டதாகவும் அதன் மிச்சங்களே சாலையில் விழுந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

வட அமெரிக்கா

கனடாவில் கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

  • June 1, 2023
  • 0 Comments

கனடாவில் தரம் ஐந்து மாணவர்கள் பல விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 18 அடி உயரத்திலிருந்து இந்த மாணவர்கள் கீழே விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாணவர்களில் பலருக்கு எலும்பு முறிந்து உள்ளதாகவும் உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.மரத்தினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஒன்றிலிருந்து இந்த மாணவர்கள் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாலம் போன்ற ஒரு கட்டமைப்பு இடிந்து விழுந்த காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி சுற்றுலா மேற்கொண்டு குறித்த […]

Skip to content