பாணந்துறையில் இளைஞர் கொலையுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர் கைது
பாணந்துறை பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞன் கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபருக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, வெக்கடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், கொடூரமான வாள்வெட்டுத் தாக்குதலில் வெட்டிக் கொல்லப்பட்டார். குற்றத்தை நிறைவேற்றுவதற்காக பிரதான சந்தேகநபர் வந்த முச்சக்கரவண்டிக்குள் குறித்த பாடசாலை மாணவன் இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக முதலில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான நபர், காயங்களுடன் ஆடைத் தொழிற்சாலை வளாகத்திற்குள் […]