இந்தியா

ஒடிசா ரயில் விபத்திற்கான காரணம் வெளியாகியது!

  • June 3, 2023
  • 0 Comments

இதுவரை 280 பேரைக் காவுக் கொண்ட ஒடிசா ரயில் விபத்து குறித்த காரணம் தெரியவந்துள்ளது. இதன்படி,  முதற்கட்ட விசாரணையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் லைன் மாறி சென்றதுதான் இந்த கோர விபத்துக்கு முக்கிய காரணம் என தகவல் தெரிவிப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே நான்கு ரெயில் தண்டவாளங்கள் உள்ளன. அதில் ஒன்று லூப் லைன். லூப் லைன் ரெயில் நிலையம் அருகே மற்ற ரெயில்களுக்கு வழி விடவும்,  […]

ஐரோப்பா

‘நாட்டு நாட்டு’பாடலுக்கு ஆட்டம்போட்ட உக்ரைன் வீரர்கள் (வீடியோ)

  • June 3, 2023
  • 0 Comments

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்ற ராம்சரண்-ஜுனியர் என்.டி.ஆர். ஆட்டத்தில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனது. அதோடு, இந்த பாடல் ஒஸ்கார் விருதையும் வென்றது. படம் வெளியான போதே இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆட்டம்போட்டிருந்தனர். ராம்சரண்-ஜுனியர் என்.டி.ஆர். போல ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.இந்நிலையில் தற்போது உக்ரைன் இராணுவ வீரர்கள் […]

வட அமெரிக்கா

கனடாவில் அனைத்து மாகாணங்களிலும் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

  • June 3, 2023
  • 0 Comments

கனடாவில் அனைத்து மாகாணங்களிலும் பரவலாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது . வழக்கமாக கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத்தீக்களை விட இவ்வாண்டு பத்து மடங்கு வேகமாக தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 67லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. கனடாவின் 13 மாகாணங்களிலும் 213 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும், 29 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கியூபெக் நகரில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டு 10 ஆயிரம் பேர் உடனடியாக வீடுகளை விட்டு […]

இலங்கை

ஐ.நா பொதுச் சபையின் துணைத் தலைவராக இலங்கை தெரிவு!

  • June 3, 2023
  • 0 Comments

ஐ.நா பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா,  சிங்கப்பூர்,  இலங்கை,  உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி 2023 செப்டெம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சார்பாக இலங்கை இந்த முக்கியமான பதவியை ஏற்றுக்கொள்கின்றது. ஆபிரிக்கா சார்பாக காங்கோ,  காம்பியா,  மொராக்கோ,  செனகல்,  உகாண்டா,  சாம்பியாவும் ஆசியா பசிபிக் நாடுகளுக்கு ஈரான், மலேசியா,  சிங்கப்பூர்,  இலங்கை,  உஸ்பெகிஸ்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு ஐரோப்பியாவிற்கு எஸ்டோனியாவும்,  […]

இந்தியா ஐரோப்பா

ஒடிசா ரயில் விபத்து ; ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்

  • June 3, 2023
  • 0 Comments

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 35 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து […]

இலங்கை

இடிந்து விழும் பேரபாயத்தில் கொழும்பில் உள்ள அடுக்குமாடி கட்டங்கள்

  • June 3, 2023
  • 0 Comments

அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி கட்டிடங்களில் 908 வீடுகள் உள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கொழும்பு, திம்பிரிகஸ்சாய, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்தக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த அடுக்குமாடி கட்டிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை, தொழிலாளர் திணைக்களம், கடற்றொழில் மற்றும் […]

இலங்கை

யாழில் இருந்து வாரத்தில் ஏழு நாட்களும் சேவைகளை ஆரம்பிக்க கலந்துரையாடல்!

  • June 3, 2023
  • 0 Comments

யாழ். விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை துறைமுகங்கள்,  கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும்  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடன் உதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா […]

பொழுதுபோக்கு

உங்களுக்கு தெரியுமா? பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் யேசுதாஸ்… மன வேதனையுடன் கூறிய செய்தி

  • June 3, 2023
  • 0 Comments

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் தந்தையை பின்பற்றி பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தனுஷின் மாரி படத்தில் வில்லனாக நடித்தார். இன்னும் ஒரு சில படங்களில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் கூட நடித்துள்ளார். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடித்திருந்ததாகவும் சில காரணங்களால் அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்றும் ஒரு பேட்டியில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் ஜேசுதாஸ். இதுகுறித்து […]

பொழுதுபோக்கு

ஆர்யாவின் வசூலை மிஞ்சிய ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்!

  • June 3, 2023
  • 0 Comments

நேற்று நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படமும் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘வீரன்’ படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த இரு படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தை, ‘விருமன்’ பட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக, சித்தி இட்னானி அழகை தாண்டி சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் […]

இந்தியா இலங்கை

விமானத்தில் இருந்து தவறி விழுந்து நபருக்கு நேர்ந்த கதி!

  • June 3, 2023
  • 0 Comments

இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ் விபத்து கடந்த வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜோ ர்ஜ் (65) என்ற பயணியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணி உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Skip to content