இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • June 5, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழையுடன் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுகாதார அமைச்சு இந்த விடயம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னர் தமது சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டின் 12 மாவட்டங்கள் உள்ளடங்கும் வகையில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

உலகம்

திடீரென இந்திய மாப்பிள்ளை போல் மாறிய எலான் மஸ்க்! வெளிவரும் இரகசியம்

  • June 5, 2023
  • 0 Comments

எலான் மஸ்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களே இவ்வாறு இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்திய மாப்பிள்ளை போல எலான் மஸ்க் ஷெர்வானி அணிந்துகொண்டு குதிரை மீது அமர்ந்துள்ளது போலவும், நடனமாடுவது போலவும் உள்ள புகைப்படங்களைப் பார்த்த பலர், இது எப்போது என இணையத்தில் விவாதம் நடத்தியுள்ளது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது தெரியவந்தது. மும்பையை சேர்ந்த ரோலிங் கேன்வாஸ் என்ற திருமணப் புகைப்பட கலைஞர், செயற்கை நுண்ணறிவில் மிட்ஜர்னி […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • June 5, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 10 பேரில் ஒருவர் ஓரினச்சேர்க்கையாளர் என தெரியவந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் படி இந்த விடயம் தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஓருபால் ஈர்ப்பாளர்கள் இம்மாதம் முழுவதையும் பெருமைமிகு மாதமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரான்சில் பத்தில் ஒருவர் ஒருபால் ஈர்பாளர்கள் என தெரியவந்துள்ளது. ipsos நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. குறிப்பாக 1997 ஆம் ஆண்டின் பின்னர் பிறந்தவர்களில் 19% சதவீதமானோர் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு பிரான்ஸ் உள்ளிட்ட 30 […]

இந்தியா

ஒடிசா விபத்தில் உயிரிழந்தோரின் பிள்ளைகளுக்காக செவாக் வெளியிட்ட அறிவிப்பு

  • June 5, 2023
  • 0 Comments

ஒடிசாவில் இடம்பெற்ற பாரிய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் செவாக் தெரிவித்துள்ளார். தனது உத்தியாகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விரேந்தர் செவாக் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “இந்த துயரமான நேரத்தில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்ய முடிந்தது. செவாக் இன்டர்நெஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் நான் அத்தகைய பிள்ளைகளுக்கு இலவச கல்வியை வழங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஒடிசா […]

இலங்கை

இலங்கையில் கோவில் திருவிழாவில் நடந்த விபரீதம் – பூசாரிக்கு நேர்ந்த கதி

  • June 5, 2023
  • 0 Comments

அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பூசாரி தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி பணம் 100 யூரோ அதிகரிப்பு?

  • June 5, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சமூக உதவி பணம் 100 யூரோ அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சமூக அமைப்புக்கள் முன்வைத்துள்ளன. ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்களுக்கு போதுமான அளவு பணம் இல்லை என தெரிவித்து குறித்த கொடுப்பனவை மாதாந்தம் 100 யூரோவாக அதிகரிக்க வேண்டும் என பல சமூக அமைப்புக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளது. ஜெர்மனியில் பண வீக்கமானது 7.2 சதவீதமாக காணப்படுகின்றது. இதேவேளையில் உணவு பொருட்களுடைய விலை ஏற்றமானது கடந்த ஒரு வருடத்தில் 17. 2 சதவீதமாக அதிகரித்துள்ள […]

இலங்கை

யாழில் பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • June 5, 2023
  • 0 Comments

யாழில் பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த மாணவனுடன் போதைக்கு அடிமையாகி உள்ள ஏனைய மாணவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவர்களுக்கு போதைப்பொருளை விநியோகம் செய்யும் நபர்களை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மாணவனை தடுத்து வைத்து நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனனர்.

இலங்கை செய்தி

திருக்கோவில் காட்டில் 600 பொலிஸார் படுகொலை!!! கருணாவுக்கு காத்திருக்கும் சிக்கல்

  • June 4, 2023
  • 0 Comments

33 வருடங்களுக்கு முன்னர் திருக்கோவில் காட்டில் 600 பொலிஸாரைக் கொன்றதாக கூறப்படும் கிழக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக அரசாங்கம் ஸ்தாபிக்கும் உண்மை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. இந்த பொலிஸாரின் கொலையை கருணா செய்ததாக, கொலை நடந்த போது திருக்கோவில் முகாமில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த பேராசிரியரும், முன்னாள் சிறப்பு அதிரடிப்படை வீரருமான ஜனித் சமிலா, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்துள்ளார். ஜூன் 11, 1990 […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் ஆரம்பப் பாடசாலைகளில் பைபிளைத் தடை செய்யப்படுகின்றன

  • June 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவில், யூட்டா மாகாணத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து பைபிள் போதனை நீக்கப்பட்டுள்ளது. இந்த, போதனைகள் ‘கொடூரத்தையும் வன்முறையையும்’ பரப்புகின்றன. ‘கிங் ஜேம்ஸ் பைபிள்’ தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்ஜிபிடி உரிமைகள் மற்றும் இன அடையாளம் போன்ற சர்ச்சைக்குரிய தலைப்புகளை கற்பிப்பதை தடை செய்வதில் மாநிலத்தில் வசிப்பவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. கூடுதலாக, யூட்டாவின் குடியரசுக் கட்சி அரசு 2022 ஆம் ஆண்டிற்குள் […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் சூரிய சக்தியால் இயங்கும் இயந்திர படகு வெள்ளோட்டம்

  • June 4, 2023
  • 0 Comments

சூரிய மின்னாற்றலில் (சோலார்) இயங்கும் இயந்திரபடகு வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் சக்தியை கொண்டு, மின்சாரத்தை பெற்றுக்கொண்டு 13 குதிரைவலுக் கொண்ட அதி உச்ச வேக இயந்திரத்தினைக் கொண்டு இயங்கும் மீன்பிடிப்படகு வல்வெட்டித்துறையில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மணிவாசகம் என்பவரது முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது கடல் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருட்களின் தேவை இல்லாமல் வெறுமனே சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு இயங்க வைக்கின்ற […]

Skip to content