நாடகத்துறைக்கு பேரிழப்பு!
புகழ்பெற்ற நாடக நடிகரும், இயக்குனருமான அமீர் ராசா ஹுசைன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66. அமீர் ராசா ஹுசைன் அரசியலிலும் சில காலம் பணியாற்றினார். அவர் கடந்த 2013-ம் ஆண்டு வரை டெல்லி பாஜக துணைத் தலைவராக இருந்தார். இதையடுத்து மோடியை விமர்சித்துவிட்டு அவர் அக்கட்சியில் இருந்து விலகினார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அமீர் ராசா ஹுசைன் கடந்த ஜூன் 3-ந் தேதி காலமானார். அவரின் மறைவு நாடகத்துறைக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. […]