இலங்கை

சலுகை நிதியுதவியை அணுகுவதற்கான இலங்கையின் தகுதியை அங்கீகரித்தது ஆசிய அபிவிருத்தி வங்கி!

  • June 8, 2023
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)  சலுகை நிதியுதவியை அணுகுவதற்கான இலங்கையின் தகுதியை அங்கீகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் சலுகை உதவிகள், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் இலங்கையின் அவசர அபிவிருத்தி நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான விருப்பங்களை விரிவுபடுத்துகிறது என்று பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட பிராந்திய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ADB இன் வளரும் உறுப்பு நாடுகளில் சலுகை ஆதாரங்களுக்கான தகுதி தனிநபர் மொத்த தேசிய வருமானம் மற்றும் கடன் தகுதியின் […]

ஆசியா

இந்தோனேசியாவில் காருக்குள் நெருக்கமாக இருந்த இளம்ஜோடி – வழங்கப்பட்ட பயங்கர தண்டனை

  • June 8, 2023
  • 0 Comments

இந்தோனேசியா நாட்டில், கார் ஒன்றிற்கு நெருக்கமாக இருந்த இளம்ஜோடி ஒன்றிற்கு சவுக்கடி கொடுக்கப்பட்டது. அடியால் வலி தாங்காமல் சுருண்டு விழுந்தார் அந்த இளம்பெண். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று அசைவதைக் கவனித்த பொலிஸார் ஒருவர் அருகே சென்று பார்த்துள்ளார்.காருக்குள் ஒரு 24 வயது ஆணும், 23 வயது பெண்ணும் முத்தமிட்டுக்கொண்டிருப்பதைக் கண்ட அவர் உடனடியாக மற்ற அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ளார். இந்தோனேசியாவில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது சட்டப்படி குற்றம் ஆகும்.ஆகவே, காருக்குள் நெருக்கமாக […]

இலங்கை

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரிப்பு!

  • June 8, 2023
  • 0 Comments

மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளது. இதன்படி இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே 2023 இல் 3,483 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது ஏப்ரல் 2023 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்து மதிப்பு 2,761 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 26.2% அதிகரிப்பைக் குறிக்கிறது. எவ்வாறாயினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் பீப்பிள்ஸ் பாங்க் ஆப் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இடமாற்று […]

இலங்கை

நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

  • June 8, 2023
  • 0 Comments

ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து அவர்களுக்கெதிராக தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 1050 எரிபொருள் நிலையங்களில் 432 எரிபொருள் நிலையங்கள் மாத்திரமே கடந்த வாரம் சகல எரிபொருட்களிலும் குறைந்தபட்ச கையிருப்பை […]

மத்திய கிழக்கு

சோமாலியா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை ; 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • June 8, 2023
  • 0 Comments

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல் ஷபாப், ஐஎஸ், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் சோமாலியாவுக்கு உகாண்டா பாதுகாப்பு படையினரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஷபிலி நகரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அல்ஷபாப் பயங்கரவாதிகள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆஸ்திரேலியா

ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்ளும் அவுஸ்ரேலியா : மக்களுக்கு எச்சரிக்கை!

  • June 8, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் கொவிட்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற நிலையில் தடுப்பூசி குறித்து மக்கள் அலட்சியமாக இருக்ககூடாது என அந்நாட்டின் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதன்படி ஆறுமாதங்களில் 16. 5 மில்லியன் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய மருத்துவசபை கரிசனைக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியா தற்போது ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்கிறது. நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச்சில் காணப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் […]

இந்தியா

பெண்ணொருவரை கொலை செய்து உடலை குத்கரில் வேகவைத்த நபர்!

  • June 8, 2023
  • 0 Comments

மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை சிறு பாகங்களாக துண்டித்து குக்கரில் வேகவைத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மும்பையில் உள்ள பிளாட் ஒன்றில் 56 வயதான நபரும் 36 வயது பெண் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து ஃப்ளாட்டிற்கு வந்த பொலிஸார் […]

இலங்கை

744 பயணிகளுடன் இலங்கை வந்த பிரம்மாண்ட கப்பல்!

  • June 8, 2023
  • 0 Comments

பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் என்ற கப்பல் ஒன்று இலங்கை வந்துள்ளது. குறித்த கப்பலில் 744 பேர் வருகை தந்துள்ளனர். உலகம் முழுவதும் பயணம் செய்து வரும் இம்ப்ரஸ்  கப்பலானது, திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஷ்ரஃப் துறையில் நிறுத்தப்பட்டது. திருகோணமலை துறைமுகத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய இந்த சுற்றுலாப் பயணிகள் தம்புள்ளை,  சிகிரியா,  திருகோணமலை போன்ற இடங்களுக்குச் செல்வுள்ளனர். அதன் பின்னர்,  இந்தக் கப்பல் இந்தியாவின் சென்னை துறைமுகத்துக்குப் புறப்படும் என்று துறைமுக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் […]

பொழுதுபோக்கு

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் நம்ம ஜோ!! எந்த படத்தில் தெரியுமா?

  • June 8, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் நடிகர் விஜய். லியே படத்தின் ரிலீஸ் அக்டோபர் 19ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் படத்தின் ரிலீசை தொடர்ந்தே தளபதி 68 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் சூட்டிங் குறித்த […]

இலங்கை வட அமெரிக்கா

கனடாவில் இந்திராகாந்தியின் படுகொலை நிகழ்வு; அமைச்சர் அலி சப்ரி கண்டனம்

  • June 8, 2023
  • 0 Comments

கனடாவில் , இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலையை பொதுவில் புகழும்விதத்தில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடும் கண்டனம்வெளியிட்டுள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திராகாந்தியின் படுகொலையை புகழும் விதத்தில் பொதுவெளியில் நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ள அலிசப்ரி, கருத்துசுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையை போற்றுதல் என்ற போர்வையில் எந்த நாடும் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகளிற்கு புகலிடம் வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு […]

Skip to content