ரஷியா- உக்ரைன் போரில் தற்போது ட்ரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மாஸ்கோ நகர் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் சிலர் காயம் அடைந்தனர். பதிலுக்கு ரஷியாவும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே மிகப்பெரிய அணையை குண்டு வைத்து தகர்த்ததாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள தென்மேற்கு ரஷியாவின் மத்திய வொரோனெஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு […]
உக்ரைன் போர் தொடரும் நிலையில், மேற்குலக நாடுகளாலேயே உக்ரைன் அதிபர் கொல்லப்படுவார் என்று ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்தாண்டு பெப்ரவரி . மாதம் போர் ஆரம்பிக்கப்பட்டு இப்போது ஓராண்டைக் கடந்தும் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. போர் நடக்கும் போது கடந்தாண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களை வழங்கினர். ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளிக்க இதுவே உக்ரைனுக்குப் பெரியளவில் உதவியது. இதனிடையே இந்த […]
பழங்கள் மிகவும் சுவையானவை மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியவை. பலவிதமான பழங்களை இயற்கை நமக்காக அளித்துள்ளது. அதில் ஒன்று தான் ஆப்பிள்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று சொல்வார்கள். ஏனெனில் அந்த அளவில் ஆப்பிள் நமது உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கின்றன. மேலும் நிறைய பேருக்கு ஆப்பிள் மிகவும் விருப்பமான பழமாக இருக்கும் ஆனால் இந்த ஆப்பிளை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இரட்டிப்பு பலன்கள் […]
கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இதனை தெரிவித்தார். அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வரும் நிலையில் இதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் வகையில் ரோபோ ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர் . இதற்காக புரோகிராம் செய்யப்பட்ட அந்த ரோபோ மனிதர்கள் உருவாக்கும் சமையல் வீடியோவை பார்த்து அது என்ன ரெசிப்பி என்பதை கண்டுபிடித்து அந்த உணவை தானே தயார் செய்து அசத்தியுள்ளது. இதன் பின் 8 சாலட் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அந்த ரோபோவிடம் கொடுத்ததாஆகவும் அதனை படித்து அந்த 8 உணவுகளையும் சமைத்த ரோபோட் ஒன்பதாஒதாக தானே […]
களுத்துறையில் ஐந்து மாடி விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று(9) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரின் சாரதி என கருதப்படும் நபரை, இன்று பிணையில் செல்ல […]
பஹ்ரைன் நாட்டில் சர்ச்சைக் குரிய கற்பழிப்பு சட்டமூலம் இரத்து செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கற்பழிப்பில் ஈடுபட்ட நபர் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தால். அவர் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா பஹ்ரைன் ஷுரா கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒருமித்த கருத்தோடு ஆதரவாக வாக்களிக்க, மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இனிமேல் […]
உறவினர்கள் இருவருக்குள் நடந்த சண்டையை விலக்கச் சென்ற ஒருவரை சண்டையிட்ட ஒருவர் கடித்துவிட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்ற நிலையிலும், அவரது நிலைமை மோசமானது. ப்ளோரிடாவைச் சேர்ந்த டோனி ஆடம்ஸ் , வீட்டில் நடந்த பார்ட்டி ஒன்றின்போது உறவினர்கள் இரண்டு பேர் கட்டிப்புரண்டு சண்டையிட, அவர்களை விலக்கிவிட முயன்றுள்ளார். அப்போது ஒருவர் ஆடம்ஸை தொடையில் கடித்துள்ளார்.உடனடியாக ஆடம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சையளித்துள்ளார்கள். ஆனால், அவரது நிலைமை மோசமாகியுள்ளது. மூன்றாவது நாள் கால் வீங்கி […]
தனது சகோதரருக்கு பதிலாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய இளைஞன், தெனியாய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெனியாய – பல்லேகம வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சிங்கள பரீட்சை வினாத்தாளை கையளிக்க தயாரான மேற்பார்வையாளர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.