நெருக்கடியில் சிக்கிய ட்ரம்ப் – 37 குற்றச்சாட்டுகளில் சிக்கியதாக தகவல்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீது ரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டதன் தொடர்பில் அவர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க அணுவாயுத ரகசியங்கள், ராணுவ விமானங்கள் உள்ளிட்ட ஆவணங்களையும் ட்ரம்ப் தவறாகக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை. ட்ரம்பின் வழக்கறிஞர்கள் இருவர் பதவி விலகப் போவதாகத் தெரிவித்துள்ளனர். ட்ரம்ப் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மயாமியில் (Miami) […]