உலகம்

பிரித்தானியாவில் வரலாற்றில் முதல் முறையாக தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் நியமனம்

பிரித்தானியாவின் 750 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பிரபு தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள நீதித்துறையை வழிநடத்தும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான் டேம் சூ கார் (58 வயது) மற்றும் டேம் விக்டோரியா ஷார்ப் (67 வயது) ஆகியோர் இந்த பதவிக்கான இரண்டு இறுதிப் போட்டியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். பிரபு தலைமை நீதிபதி என்பது தற்போது ஆண்களுக்கு மட்டுமேயான தலைப்பு என்பதால், “பெண் தலைமை நீதிபதி” என்ற தலைப்புக்கு இடமளிக்கும் […]

உலகம்

அமேசான் காட்டில் தொலைந்த குழந்தைகள் 40 நாட்களின் பின்னர் மீட்பு

கொலம்பியாவின் அமேசான் காடுகளில் விமானம் விபத்துக்குள்ளானதில் 40 நாட்களுக்குப் பிறகு 4 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மே 1 ஆம் திகதி, 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் ஒரு சிறிய ரக விமானம் கொலம்பியாவில் இருந்து புறப்பட்டு அமேசான் காட்டில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானத்தில் பயணித்த சிறுவர்களின் தாய், விமானி உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில், லெஸ்லி ஜேகோபோம்பேர் (13), சோலோனி ஜெகோபோம்பேர் (9), டியன் ரனோக் முகுடி (4)மற்றும் கைக்குழந்தையான கிறிஸ்டின் […]

இலங்கை

இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை வெளிநாடொன்றில் பயன்படுத்த முடியும்! அது எந்த நாடு தெரியுமா?

பிரித்தானியாவில் இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாக அதன் ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பரீட்சைக்கு தோற்றாமல் உரிய அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள் இந்த நாட்டில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி […]

இந்தியா

ராஜஸ்தானில் குல்பி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி

  • June 10, 2023
  • 0 Comments

ராஜஸ்தானில் குல்பி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் வியாபாரி ஒருவர் குல்பி விற்று வந்தார். அப்போது, குல்பி வாங்கி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில், 15 குழந்தைகளின் உடல் நிலை மோசமடைந்ததால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நேற்று மருத்துவமனை சிகிச்சை முடிந்து 15 […]

உலகம்

டோக்கியோவில் இரு விமானங்கள் மோதி விபத்து!

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சில விமான சேவைகள் தாமதமடைந்துள்ன. இதன்காரணமாக அந்த விமான நிலையத்தில் உள்ள நான்கு ஓடு பாதைகளில் ஒரு ஓடுபாதையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், விமானம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாவும், அந்த விமானத்தின் சில பகுதிகள் விமான ஓடுபாதையில் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், மேலதிக தவல்களை ஜப்பானின் போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கவில்லை என சர்வதேச ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மத்திய கிழக்கு

ஹோட்டலுக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள்…!

  • June 10, 2023
  • 0 Comments

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை ஹோட்டல் ஒன்றில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகளால் பலர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சுமார் 12 மணி நேரம் நீண்டுள்ளது தீவிரவாதிகளின் கதிகலங்க வைக்கும் முற்றுகை. தகவல் அறிந்து சம்பவ இடத்தில் திரண்ட ராணுவம் மற்றும் பொலிஸாரால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 84 பேர்கள் அந்த ஹொட்டலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், 7 பேர் கொண்ட பயங்கரவாதிகள் […]

இந்தியா

கோவை விமான நிலையத்தில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலை எவ்வளவு தெரியுமா?

கோவை விமான நிலையத்தில் இரண்டு இட்லி மற்றும் ஒரு வடை ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் இட்லி ஒன்று ரூ.90, ஒரு செட் இட்லி மட்டும் ரூ.120, பரோட்டா குருமா ரூ.200, சப்பாத்தி ஒரு செட் ரூ.200, ஆனியன் ரோஸ்ட் ரூ.220 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கோவை பீளமேட்டில் அமைந்துள்ள விமான நிலையத்தில் விற்கப்படும் இந்த விலை கேட்போரை நிச்சயம் தலை சுற்ற வைக்கும். விமான நிலையத்திற்கு மட்டுமில்லை. விமான நிலையத்திற்கு வெளிப்புறத்தில் உள்ள கடையிலும் […]

வட அமெரிக்கா

டிரம்பின் வீட்டு குளியலறையில் கைப்பற்றப்பட்ட அணு ஆயுத ரகசிய ஆவணங்கள்!

  • June 10, 2023
  • 0 Comments

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது பதவி காலத்தில் கையாண்ட ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் அவற்றை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 100க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இதற்கிடையே ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் டிரம்ப் மீது 7 கிரிமினல் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் மியாமி கோர்ட்டில் […]

பொழுதுபோக்கு

அப்பாவால் அதை இழந்துவிட்டேன்!!! வரலட்சுமி பேட்டி

  • June 10, 2023
  • 0 Comments

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர். இவர் தந்தை மீது அதிக அன்புள்ளவர். இதனால் தான் தாய்.தந்தை பிரிவிற்கு பின்னரும் இன்னும் தன் தந்தை சரத்குமார் உடன் தொடர்பில் இருக்கிறார் வரலட்சுமி. இவர் தன்னுடைய முதல் படத்திலேயே நடிகர் சிம்புவுடன் இணைந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்திருந்தார். இவர் தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது,வசூலிலும் சிறப்பாக அமைந்தது. இதனால் விஜய் உள்ளிட்ட […]

இலங்கை

மண்மேட்டில் மோதி பேருந்து விபத்து! மாணவன் பலி: பலர் படுகாயம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கெலிங்கந்த கொலனி அகலவட்டியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மதுகம டிப்போவிற்குச் சொந்தமான பேருந்து கெலிங்கந்தவிலிருந்து மதுகம நோக்கிப் பயணித்து மஹேலி எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள அணையில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் […]

Skip to content