உயர் அதிகாரிகள் இருவருக்கு மாநாட்டுக்கு செல்வதற்கான அனுமதி மறுப்பு!
கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு மாநாட்டுக்காக செல்வதற்கு, தமது அமைச்சின் கீழ்வரும் நிறுவனமொன்றின் உயர் அதிகாரிகள் இருவருக்கு இலங்கையின் நிதி அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. அரச தலைவர் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் காரணமாக இந்தப் பயணத்தை அங்கீகரிக்க முடியாது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் வணிக வகுப்பில் அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கான விமான அனுமதிச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு அரச நிதியை வெளியிட முடியாது என்பதையும் அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது. எனினும், குறித்த அதிகாரிகள் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு […]