இந்தியா – குடிபோதையில் மனைவியின் மூக்கை கடித்து விழுங்கிய கணவன்
இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் பெர்பாரா பகுதியில் 35 வயதுடைய பாபன் ஷேக் என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக மது கதுன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பாபன் ஷேக் அடிக்கடி போதையில் வந்து தன்னுடைய மனைவியின் அழகை வர்ணித்துள்ளார். குறிப்பாக தன் மனைவியின் மூக்கு அழகாக இருப்பதாகவும் ஒரு நாள் அதை கடித்து சாப்பிட்டு விடுவேன் […]