கிரீஸ் கடற்பரப்பில் மூழ்கிய படகு : 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்!
கிரீஸ் கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலான குழந்தைகளும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கிரேக்கத்தின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே 75 கிலோமீட்டர் (46 மைல்) தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படகு மூழ்கியபோது எத்தனை பேர் அதில் பயணித்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில் எழுமாறாக சுமார் 750 பணிகள் பயணித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் […]