ஐரோப்பா

ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பிராந்தியங்களில் தேர்தல் நடத்த தயார்!

  • June 16, 2023
  • 0 Comments

உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்யா இன்று அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் இந்த தேர்தல் நடைபெறும் என குறிப்பிடப்படுகின்றது. செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்ய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. டோனெட்ஸ்க், லுஹான்க், கேர்சன், ஸபோரிஸ்ஸியா பிராந்தியங்களில் இத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • June 16, 2023
  • 0 Comments

இலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நுளம்புகள் மூலம் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சரும், விசேட நிபுணருமான டொக்டர் சீதா அறம்பேபொல தெரிவித்தார். மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்குவைக் கட்டுப்படுத்த தனியான வழிகாட்டுதல்களைத் தயாரிக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார். நிபுணர் குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான, விசேட வைத்திய […]

ஆசியா

சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவல்

  • June 16, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதால், சிங்கப்பூர் தேர்தல் துறை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள சிங்கப்பூர் தேர்தல் துறை பொதுமக்கள் நேற்று முதல் வரும் ஜூன் 28- ஆம் திகதி வரை தேர்தல் துறையின் இணையதளப் பக்கத்தில் அல்லது நேரில் சென்றுப் பார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு – அரசாங்கம் விளக்கம்

  • June 16, 2023
  • 0 Comments

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார். தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான வேறுபாடுகளினால் டொலரின் பெறுமதியில் ஏற்ற இறக்கம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களின்படி, ரூபாவின் பெறுமதி நேற்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, அமெரிக்க […]

ஐரோப்பா

பிரான்ஸின் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

  • June 16, 2023
  • 0 Comments

பிரான்ஸின் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐந்து மாவட்டங்களுக்கு காட்டுத் தீ பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் காட்டுத் தீயினை கணிக்கும் கருவி அமைக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Meuse, Moselle, Meurthe-et-Moselle ஆகிய மூன்று கிழக்கு மாவட்டங்களிலும், பரிஸ் மற்றும் Hauts-de-Seine ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த ஐந்து மாவட்டங்களுக்கும் ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக Météo France அறிவித்துள்ளது. ஜூன் மாத […]

ஐரோப்பா

79 பேரின் உயிரை பறித்த ஐரோப்பிய கனவு – 106 பேரை காப்பாற்றிய செல்வந்தரின் படகு

  • June 16, 2023
  • 0 Comments

கிரீஸுக்கு அருகே மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்த பெரும் சோகமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. 20 முதல் 30 மீட்டர் வரை நீளம் கொண்ட அந்தப் படகில் நூற்றுக்கணக்கான குடியேறிகள் இருந்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் லிப்யாவிலிருந்து இத்தாலிக்குச் சென்றுகொண்டிருந்தனர். தேடல் பணிகளில் மெக்சிகோவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தரின் சொகுசுப் படகு பேருதவி புரிந்தது. குறித்த செல்வந்தரின் சொகுசுப் படகில் 106 பேர் காப்பாற்றப்பட்டதாக Bloomberg செய்தி நிறுவனம் சொன்னது. படகு மெக்சிகோவில் ‘வெள்ளி அரசர்’ […]

ஐரோப்பா

ஜெர்மனி பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • June 16, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயண அட்டை ஒகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனிய நாட்டில் போக்குவரத்து தொடர்பில் மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படு வருகின்றது. தற்பொழுது வழங்கப்பட்டு வந்த 49 யுரோ பயண அட்டையால் ஜெர்மனியர்கள் பயன அடைந்து வருகின்றது. இந்நிலையில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் வாழுகின்ற பாடசாலை மாணவர்கள் ஷோ கோ டிக்கட் என்று சொல்லப்படுகின்ற ஒரு பயண அட்டையை வைத்து இருந்தால் அவர்கள் வருகின்ற ஆவணி மாதத்திற்கு பின் இந்த […]

இலங்கை

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு!

  • June 16, 2023
  • 0 Comments

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான இடங்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஃ இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சி இந்த கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பானில் இருந்து டொலர் செலவின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் திறன் தமது சங்கத்திற்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து புதிய வாகனத்திற்கு 70% குறைவாக செலுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் இரட்டை குழந்தை கொலையாளி மற்றும் கற்பழிப்பு குற்றவாளியை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

  • June 15, 2023
  • 0 Comments

இரட்டை குழந்தை கொலையாளி மற்றும் கற்பழிப்பு குற்றவாளி கொலின் பிட்ச்போர்க் பரோல் வழங்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். 1983 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் லீசெஸ்டர்ஷையரில் லின்டா மான் மற்றும் டான் ஆஷ்வொர்த் ஆகிய 15 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்ததற்காக பிட்ச்போர்க் ஆயுள் தண்டனை பெற்றார். 63 வயதான அவர் 2021 இல் விடுவிக்கப்பட்டார், பின்னர் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஏப்ரல் மாதம் தனிப்பட்ட […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் பலி

  • June 15, 2023
  • 0 Comments

கனேடிய மாகாணமான மனிடோபாவில் வியாழன் அன்று முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் மீது டிரக் மோதியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வின்னிபெக்கிற்கு மேற்கே 170 கிமீ (105 மைல்) தொலைவில் உள்ள தென்மேற்கு மனிடோபாவில் உள்ள கார்பெரி நகருக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அறிக்கை கூறுகிறது. இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டால், சமீபத்திய கனடிய வரலாற்றில் இது மிகவும் ஆபத்தான சாலை விபத்துகளில் ஒன்றாக இருக்கும். “கார்பெர்ரி அருகே நடந்த சோகமான […]