இலங்கை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

  • June 19, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறமதி இன்று (19) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால்  வெளியிடப்பட்ட தரவுகளுக்கு அமைய,  அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை 297 ரூபாய் 53 சதமாக பதிவாகியுள்ள அதேவேளை விற்பனை விலை 315 ரூபாய் 12 சதமாக பதிவாகியுள்ளது. மேலும் கடந்த வெள்ளியன்று  அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை 300 ரூபாவாகவும், விற்பனை விலை 319 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சி – அயர்லாந்து வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

  • June 19, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் குடி வந்தால், 92000 USD வரை மானியம் தருவதாக அயர்லாந்து அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அயர்லாந்து தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஒரு அங்கமாக இந்த திட்டத்தை அந்நாடு அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை-1 முதல் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என அயர்லாந்து செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அயர்லாந்து தனது மேற்குக் கடற்பரப்பில் அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட அழகிய தீவுகளுக்கு புத்துயிர் அளிக்கும் […]

செய்தி

கொழும்பின் முக்கிய வழித்தடங்களில் பேருந்து சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

  • June 19, 2023
  • 0 Comments

கொட்டாவை – பொரளை (174) மற்றும் கொட்டாவ – கல்கிசை (225) வழித்தடங்களில் உள்ள தனியார் பேருந்து சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மேற்கூறிய இரண்டு வழித்தடங்களை உள்ளடக்கிய 10 சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த சொகுசு பேருந்துகள்  உரிய தனியார் பஸ் சங்கங்களுக்கு அறிவிக்காமல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வட அமெரிக்கா

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் ; ஒருவர் பலி

  • June 19, 2023
  • 0 Comments

கனடாவில் சீக்கிய தேவாலயம் ஒன்றின் எதிரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் சொல்லப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவார் பகுதியில் நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.குரு நானாக் குருத் துருவா என்னும் ஆலயத்திற்கு எதிரில் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.எனினும் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய […]

தமிழ்நாடு

மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் ;தகாத உறவால் நடந்த விபரீதம்!

  • June 19, 2023
  • 0 Comments

சென்னையில் 2½ வயது ஆண் குழந்தையை கொன்ற வழக்கில் குழந்தையின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செல்வபிரகாசம்- லாவண்யா.இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தையொன்றும் இருக்கிறது, இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் லாவண்யா குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகனை பார்ப்பதற்காக செல்வபிரகாசம் வீட்டுக்கு சென்றுள்ளார், அங்கு லாவண்யா இல்லை.குழந்தை இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர், இதனால் அதிர்ச்சியடைந்த செல்வபிரகாசம் குழந்தையின் மரணத்தில் […]

ஆசியா

கிரீஸ் கப்பல் விபத்தில் 300 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு!

  • June 19, 2023
  • 0 Comments

கிரீஸ் கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளான படகில் 300இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக் காரணமாக புகலிடம் தேடி பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள, பாகிஸ்தானின் செனட்டின் தலைவர் முஹம்மது சாதிக் சஞ்சரானி இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் உள்ளன, பிரிந்த ஆன்மாக்கள் நித்திய அமைதியைக் காண நாங்கள் பிரார்த்திக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். […]

இலங்கை

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது தாக்குதல்!

  • June 19, 2023
  • 0 Comments

களனியிலுள்ள இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது இனம்தெரியாத சிலர் நேற்று  (18) தாக்குதல் நடத்தியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. களனி  சரத்சந்திர டயஸ் மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில்,  வீட்டின் சொத்துக்களுக்கு சேதமேற்பட்டள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து  சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரனவீர,  மே தாக்குதலின் போது ஹுணுப்பிட்டிய விலிருந்த எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அதன் பின்னர் மாலபே […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு போட்டியாக பெலாரஷ் எல்லை அருகே குளிவிக்கப்பட்டுள்ள உக்ரைன் படை

  • June 19, 2023
  • 0 Comments

ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி அலெக்சி போலிஷ்சக் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளின் எல்லை அருகே உண்மையில் உக்ரைனிய அரசு தனது படைகளை குவித்து உள்ளது என தெரிய வந்து உள்ளது. அது ரஷ்யாவின் பாதுகாப்பு திறனை ஆய்வு செய்யும் முயற்சியாக சீராக நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளார். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் ரஷ்யா போர் […]

வட அமெரிக்கா

அமெரிக்க கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் தளர்வு

  • June 19, 2023
  • 0 Comments

கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குறியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வணிப்பதற்காக வழங்கப்படும் கிரீன் கார்டு ஆண்டுதோறும் 1லட்சத்து 40ஆயிரம் பேருக்கு அளிக்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஒரு நாட்டிற்கு 7 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்யிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ர்வின்படி கடும் உடல்நல பாதிப்பு, உடல் ஊனம், வேலை பார்க்கும் நிறுவனத்துடன் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் சவால்களை சந்திப்பவர்கள் அதற்கான ஆதாரங்களை அளித்தல் அவர்களுக்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பாடசாலை ஆசிரியர்கள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

  • June 19, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் போதிய சம்பளம் இல்லாததால், அரசுப் பாடசாலைகளில் பணிபுரியும் ஆஸ்திரேலிய ஆசிரியர்களின் எண்ணிக்கை, தனியார் பாடசாலைகளுக்குத் திரும்புவது கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களின்படி, ஒரு தனியார் பாடசாலை ஆசிரியரின் குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் சுமார் 160,000 டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசுப் பாடசாலை ஆசிரியரின் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க சம்பள உயர்வு என்று கூறப்படுகிறது. நியூ சவுத் வேல்ஸில் ஒரு பொதுப் பள்ளி ஆசிரியரின் சம்பளம் சுமார் 113,000 டொலர் மற்றும் […]