கனடாவில் தமிழர் ஒருவருக்கு சீட்டிழுப்பில் கிடைத்த பெரும் தொகை பரிசு
கனடாவில் இடம்பெற்ற லொட்டோ சீட்டிழுப்பில் பிரம்ப்டன் நகரை சேர்ந்த தமிழர் ஒருவர் ஒரு மில்லிய டொலரை வெற்றிபெற்றுள்ளார். தொடர்ச்சியாக லொட்டோ சீட்டிழுப்பில் விளையாடி வந்த அவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. 56 வயதான சண்முகலிங்கம் கனகரத்தினம் என்பவரே இந்த பரிசை வென்றுள்ளார். தனது வெற்றி குறித்து பேசிய அவர், குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்றை வாங்க உள்ளதாகவும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆக்டோபரில் நடந்த சீட்டிழுப்பில் அவர் இந்த தொகையை வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.