ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவில் நிர்வாணக் குளியல்!

  • June 22, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் டெர்வெண்ட் ஆற்றில் 3 பாகை செல்சியஸ் உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியளில் ஈடுபட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (22) ஆண்டிலேயே குறைந்த பகல் பொழுதை கொண்ட நாளாகும். ஆகையால், அதனை கொண்டாடும் விதமாக இந்த விநோத செயலை மக்கள் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

மார்க் ஜூக்கர்பெர்க்கை சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்..

  • June 22, 2023
  • 0 Comments

மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் இயங்கி வரும் பேஸ்புக் மற்றும் எலான் மஸ்க் தலைமையில் இயங்கி வரும் நிறுவனமான ட்விட்டர் ஆகியவை அமெரிக்காவில் இயங்கி வருகிறது. சமீபத்தில் ட்விட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. வளர்ச்சி நிலையில் இருக்கும் இந்த முயற்சி “பி92″ என பெயரிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. இம்முயற்சியை மஸ்க் ரசிக்கவில்லை. பேஸ்புக் நிறுவனருக்கு எதிராக பல கிண்டலான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இதை உற்றுக் கவனித்து வந்த ட்விட்டர் ஆதரவாளர் […]

பொழுதுபோக்கு

நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு இத்தனை மில்லியன் டொலர்களா?

1993 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரம்பா. 2010ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரம்பாவின் கணவர் இந்திரகுமார் மேஜிக்வுட்ஸின் சிஇஓ-வாக இருந்து வருகின்றார். இவர் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்பவர் என்றாலும் சென்னையில் இவர்களின் தொழிற்சாலை ஒன்றும் உள்ளதாம். இந்த நிறுவனம் சமையலறை மற்றும் படுக்கை அறை, குளியல் அறை உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்வதாகும். […]

மத்திய கிழக்கு

சூடானில் அறிவிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் முன்பே மீண்டும் மோதல்

  • June 22, 2023
  • 0 Comments

சூடானில் 3நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் முன்னே ராணுவத்திற்கும் துணை, ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் மூண்டது. அந்நாட்டின் உளவுத்துறை அமைச்சகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டமை தொடர்ந்து தலைநகர் கார்டூமில் இயங்கி வந்த 2 துணை ராணுவ நிலைகள் மீது ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியது. அதை தொடர்ந்து குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகளில் இருதரப்பினக்கும் இடையே நாள் முழுவதும் துப்பாக்கி சண்டை நடந்தது. பல நாட்களுக்கு முன்பே குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏற்கனவே […]

இலங்கை

இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்!

  • June 22, 2023
  • 0 Comments

வாக்கு அரசியலுக்கு ஆசைப்பட்டு, தொல்பொருள் சின்னங்கள் மீது கை வைப்பதை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  ‘வாக்குகளுக்கு ஆசைப்பட்டு,  இந்நாட்டின் தொல்பொருட் சின்னங்களில் கை வைக்க வேண்டாம்.  இதில் கை வைத்தால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இந்த நாட்டில் இன்று பாதுகாப்புக்கும் […]

பொழுதுபோக்கு

பாவனாவுடன் முதல் படத்திலேயே அந்தரங்க உறவு…. இயக்குனரின் திமிர் பேச்சு

  • June 22, 2023
  • 0 Comments

மிஷ்கின் இயக்கத்தில் உருவான சித்திரம் பேசுதடி திரைப்படம் வந்த புதிதில் அவர் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் மாணவர்கள் இந்தப் படத்தின் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சந்தோஷம் அடைகிறீர்கள் என கேட்டிருக்கிறார்கள். உடனே கொஞ்சம் கூட யோசிக்காத மிஷ்கின் இதன் மூலம் எனக்கு கிடைத்தது பாவனா தான். அவருடன் எனக்கு இருந்த அந்தரங்க உறவு தான் என்னுடைய சந்தோஷம் என ஸ்டைலாகவும், திமிராகவும் கூறி இருக்கிறார். மலையாள நடிகையான இவர் இந்த […]

ஆசியா

சீனாவின் உரிமை மீறல்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை – பென்பா செரிங்

  • June 22, 2023
  • 0 Comments

சீனாவின் உரிமை மீறல்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என திபெத்தால் நாடு கடத்தப்பட்ட அரசியல் தலைவர் பென்பா செரிங் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டில் திபெத்தின் நாடுகடத்தப்பட்ட அரசாங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு தனது முதல் பயணத்தை  பென்பா செரிங் மேற்கொண்டு, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது சீனாவின் உரிமை மீறல் குறித்து எடுத்துரைத்துள்ளார்.  திபெத் மற்றும் சின்ஜியாங்கில் சிறுபான்மையினரை தவறாக நடத்தியதற்காக சீன அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சீன […]

இலங்கை

குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்! வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைப் பெண் ஒருவர் குவைத்தில் உயிரிழந்துள்ளதாக இலங்கைத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளது. 66 வயதுடைய குலசிங்க ஆராச்சியைச் சேர்ந்த அனுலா பிரிதிமாலி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இலக்கம் 438/1, நுகவத்தை வீதி, கிரிவத்துடுவ என்ற முகவரியில் வசிப்பதாக குடிவரவுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள நெருங்கிய உறவினரோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்களோ இருந்தால் விரைவில் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

கிரிமியாவை, கெர்சனுடன் இணைக்கும் பாலத்தை சேதப்படுத்திய ரஷ்யா!

  • June 22, 2023
  • 0 Comments

உக்ரேனிய ஏவுகணைகள்,  கிரிமியாவை கெர்சனுடன் இணைக்கும் பாலத்தை தாக்கியதாக ரஷ்யா கூறுகிறது. இதன்படி ரஷ்யாவின்  சோன்ஹார் சாலைப் பாலத்தை ஒரே இரவில் தாக்கியதால் போக்குவரத்தை வேறு பாதையில் திருப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும், வாகனங்களை வேறு பாதைக்கு திருப்பிவிடவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே போர் தொடங்கியதில், இருந்து கிரிமையை மீட்டெடுப்போம் என உக்ரைன் சூளுரைத்துள்ளது. அதற்கான முதல்கட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் உக்ரைன் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் […]

உலகம்

மாலத்தீவு ஆளும் கட்சியில் இருந்து முன்னாள் அதிபர் நஷீத் விலகல்

மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான முகமது நஷீத் ஆளும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மொஹமட் நஷீட், ‘இந்த நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, நான் இந்தக் கட்சியில் நீடிப்பது சிறந்தது என்று நான் நினைக்கவில்லை.என சுட்டிக்காட்டியுள்ளார். 56 வயதான முகமது நஷீத் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியில் இருந்து விலகியிருந்தாலும் சபாநாயகர் பதவியில் நீடிப்பதாக அறிவித்துள்ளார்.