ஆசியா

தன் வீட்டு மொட்டை மாடியில் வேன்களை பார்க்கிங் செய்த நபர்!

  • June 24, 2023
  • 0 Comments

தைவான் நாட்டில் குடியிருப்பின் வாசல் பகுதியில் வேனை நிறுத்தியதற்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தன்னுடைய வீட்டின் குறுகலான மொட்டை மாடியில் தனது 2 வேன்களை பார்க்கிங் செய்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதைப்பார்த்த பயனர்கள் ஏன் மொட்டை மாடியில் வேன்களை நிறுத்தி உள்ளீர்கள்? எப்படி வேன்களை மொட்டை மாடிக்கு கொண்டு சென்றீர்கள்? என கேள்விகளை எழுப்பி உள்ளனர். அதற்கு தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் விரக்தியில் இவ்வாறு செய்ததாக […]

ஆசியா

சீனாவின் உரிமைக்கோரலுக்கு எதிரான நடவடிக்கை போருக்கான அழைப்பாகவே கருதப்படும் – சி ஜின்பிங்!

  • June 24, 2023
  • 0 Comments

தைவானுடன் போர் மூளும்போது பல சீனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவின் உரிமைகோரலுக்கு சவாலாக கருதப்படும் எந்தவொரு நடவடிக்கையும் போருக்கான அழைப்புகளாகவே கருதப்படும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். சீனக் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் பொதுமக்களின்  தேசியவாதத்திற்கும் அது தோற்றுவித்த போர்க்குணத்திற்கும் சலுகைகளை வழங்கக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள் எனத் தெரிவித்த அவர், மேற்கு நாடுகள் கவலைப்படுவது சரியானது என்று சுட்டிக்காட்டினார். தைவானைப் பொறுத்தவரை, சீன குடிமக்களின் கருத்துகளை “மீற முடியாது” […]

இலங்கை

வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு!

  • June 24, 2023
  • 0 Comments

இலங்கைக்கு 12 இலட்சத்திற்கும் அதிகமான வேலை அனுமதிபத்திரங்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சுமார் 41 நாடுகளில் இருந்து தொழில்வாய்ப்பு பத்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், இவ் வருத்தில் 03  இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு திறன் மற்றும் மொழித்திறனை வளர்த்து இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றதென அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

பொழுதுபோக்கு

24 மணி நேரத்திற்குள் மகத்தான சாதனை படைத்தது “நா ரெடி பாடல்”

  • June 24, 2023
  • 0 Comments

LEO first Single பாடலான நா ரெடி பாடல் வெளியாகி 24 மணி நேரம் நிறைவடைந்திருக்கும் சூழலில் பாடல் 16 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். மாஸ்டர் கூட்டணியின் அடுத்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு எழுந்துள்ளது. இதன் காரணமாக படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸும் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டை ரிலீஸுக்கு முன்னதாகவே லியோ எடுத்துவிட்டது […]

உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு – 11 பேர் காயம்!

  • June 24, 2023
  • 0 Comments

லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்ட CX880 என்ற ஜெட்லைனர் , தொழிநுட்ப கோளாறு காரணமாக ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்திற்கே திரும்பியது. இதன்போது அவசர கதவின் வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், பயணிகள் வெளியேறும்போது 11 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் செல்லும் விமானம் CX880, “தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக புறப்படுவதை நிறுத்தி வாயிலுக்கு திரும்பியது. விமானத்தில் 293 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் இருந்த நிலையில், […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகரின் வீட்டில் அடுத்தடுத்து இரு மரணங்கள்…. அதிர்ச்சியில் திரையுலகம்

  • June 24, 2023
  • 0 Comments

பிரபல நடிகரும், இயக்குனருமான, போஸ் வெங்கட் குடும்பத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்த மரணங்கள் நிகழ்ந்துள்ள சம்பவம், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். இந்த சோகத்தில் இருந்து குடும்பத்தினர் மீள்வதற்குள் போஸ் வெங்கட்டின் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் இரண்டு பேரை பறிகொடுத்துவிட்டு, போஸ் வெங்கட்டின் குடும்பமே கண்ணீரில் மூழ்கியுள்ளனர். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு ஆறுதல் கூறிவருவதோடு, இறந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள். சின்னத்திரையில் நடிகராக […]

ஐரோப்பா

UPDATE (06) வாக்னர் கைப்பற்றிய பிராந்தியத்தில் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்த ரஷ்யா!

  • June 24, 2023
  • 0 Comments

ரஷ்ய இராணுவம் வோரோனேஜ் பிராந்தியத்தில் “போர் நடவடிக்கைகளை” மேற்கொண்டு வருவதாக அதன் அந்நகரத்தின் ஆளுநர்  தெரிவித்துள்ளார். அந்நகரத்தின் ஆளுநரான அலெக்சாண்டர் குசேவ், “தேவையான செயல்பாட்டு மற்றும் போர் நடவடிக்கைகள்” “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக” நடந்து வருவதாகக் கூறினார். முன்னதாக மாஸ்கோவில் இருந்து 300 மைல் தொலைவில் உள்ள வோரோனேஜ் நகரில் உள்ள அனைத்து இராணுவ வசதிகளையும் வாக்னர் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லவுள்ள பயணிகளுக்கு சிக்கல்! வாக்னர் […]

இலங்கை

பிரிட்டனர் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த காணாமல்போனவர்களின் உறவினர்கள்!

  • June 24, 2023
  • 0 Comments

காணாமல்போனவர்களின் உறவினர்களை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது டுவிட்டர், “ பதிவில் இதனை தெரிவித்துள்ளது. பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து இலங்கையின் மனித புதைகுழிகள் தொடர்பான புதிய அறிக்கையின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை

படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

  • June 24, 2023
  • 0 Comments

எம்பிலிப்பிட்டிய – வெலிக்கடையாய பகுதியில் இன்று (ஜூன் 24) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச்சூட்டு வன்முறையுடன் தொடர்புடைய 22 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில், அதனை தவிர்ப்பதற்காக இளைஞர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து விசேட அதிரடிப்படையினரும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அதில் இளைஞர் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது. உயிரிழந்தவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும், […]

ஆசியா

காதல் வலை வீசி பெண்களை துஷ்பிரயோகம் செய்த இந்திய நபருக்கு சிங்கப்பூரில் சிறை!

  • June 24, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் இரண்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இந்திய சமயல் காரர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 44 வயதுடைய இந்திய சமையல்காரர் ஒருவர் 3 மாத காலத்திற்குள் இரண்டு இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். குறித்த நபர் இரு பெண்களையும் காதலிப்பதாக கூறி துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கைது செய்யப்பட்டடுள்ள இந்திய நபரை மூன்று மாதங்கள் வரை சிறையில் வைக்க சிங்கப்பூர் […]