ஐரோப்பா

பிரித்தானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

  • June 29, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ட்ரஸ்ஸல் டிரஸ்ட்’  என்ற உணவு வங்கித் தொண்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவர்,  உணவு வாங்கப் போதிய பணமில்லாமல் தவித்து வருவதாகவும்,  வாழ்க்கைச் செலவுகள் உயர்வடைந்தமையே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரித்தானியாவின் பொருளாதாரம் உலகில் 6ஆவது இடத்தில் உள்ளபோதிலும்,  கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து […]

ஆசியா ஆஸ்திரேலியா

அதிபர் ஜின்பிங்குடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சுவார்த்தை

  • June 29, 2023
  • 0 Comments

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கடந்த ஜனவரியில் பதவி விலகினார். அவருக்கு பின்னர் நாட்டின் பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் சீனா சென்றுள்ளார். அவர் பதவியேற்புக்கு பின்னர் முதன்முறையாக சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக நியூசிலாந்து உள்ளது. மேலும் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில் இந்த பயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. டியான்ஜினில் நடைபெற்ற உலக […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ள மஹிந்த!

  • June 29, 2023
  • 0 Comments

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில், சமூர்த்தி அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே மகிந்த ராஜபக்ஷ மேற்படி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த […]

ஐரோப்பா

பற்றி எரியும் பிரான்ஸ் : ஒரே இரவில் 150 பேர் கைது!

  • June 29, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 17 வயதான இளைஞர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக இரண்டாவது நாளாக பிரான்சில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (29.06) அமைச்சரவை நெருக்கடிக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்ட டர்மனின் “தாங்க முடியாத வன்முறை […]

வட அமெரிக்கா

இறந்தவர்களின் உடல்களுடன் மீட்கப்பட்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பல்

  • June 29, 2023
  • 0 Comments

கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் இறந்தவர்களின் உடல்களும் காணப்படுவதாக தகவல் வெளியாகிள்ளது. அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்ய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கான […]

இலங்கை

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் விஜயகலா மகேஸ்வரன்!

  • June 29, 2023
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (ஜூன் 29) வீதி விபத்தொன்றில் சிக்கிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை புத்தளம் முந்தலம பிரதேசத்தில் வைத்தே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த விஜயகலா மகேஷ்வரன் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார். விபத்துக்கான காரணங்கள், வெளியாகாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

இலங்கை

லொத்தர் சீட்டுக்களின் வி்லை அதிகரிப்பு!

  • June 29, 2023
  • 0 Comments

தேசிய லொத்தர் சபை (NLB) மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) ஆகியவை தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. இதன்மூலம், என்எல்பி மற்றும் டிஎல்பி லாட்டரி சீட்டுகளின் விலை 20 ரூபாயில் இருந்து 40ரூபாய் வரை  இருந்து உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தம் வரும் ஜுலை 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகுிறது.  

ஐரோப்பா

இலங்கை இளைஞனால் ரோமானிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

  • June 29, 2023
  • 0 Comments

ரோமில் தனது காதலியை கொடுரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 17 வயதுடைய இவ் இளைஞர் 17வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட யுவதியின் உடலில் பத்து கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதாகவும் குப்பைகளுக்கு மத்தியில் அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர்களுக்கு இடையே இடம் பெற்ற வாக்குவாதமே கொலையில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

கரண் ஜோஹர், ராம் சரண், ஜூனியர் NTR, மணிரத்னத்திற்கு Oscars அழைப்பு

  • June 29, 2023
  • 0 Comments

ஆஸ்கர் தேர்வு குழு பட்டியலில் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 4 தென்னிந்திய பிரபலங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் குழுவில் இணைய, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட நான்கு தென்னிந்திய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக சேருவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஏற்கனவே இந்த தேர்வு குழுவில் ஏ.ஆர்.ரஹ்மான் […]

இலங்கை

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

  • June 29, 2023
  • 0 Comments

இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை மன்னாரில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது. இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் விசேடமாக துவா […]