பொழுதுபோக்கு

குடும்பத்தோடு சல்மான் கான் வெளியிட்ட புகைப்படம்

  • June 29, 2023
  • 0 Comments

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் 57 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். இந்த நிலையில் இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் ஈத் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு சல்மான் கான் தனது குடும்பத்துடன் ஈத் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இதை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். EID UL ADHA MUBARAK pic.twitter.com/9ytammlKJG — Salman Khan (@BeingSalmanKhan) June 29, 2023

வட அமெரிக்கா

கனடாவின் வாட்டர் லூ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கோரச் சம்பவம்

  • June 29, 2023
  • 0 Comments

கனடாவின் வாட்டர் லூ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் பேராசிரியர் ஒருவரும் இரண்டு மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வாட்டர் லூ பல்கலைக்கழகத்தின் வகுப்பறை ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து கிடையாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.எனினும் குறித்த நபர் மாணவரா அல்லது ஆசிரியரா […]

இலங்கை

ஆணாக வாழ ஆசைப்பட்ட சிறுமி எடுத்த விபரீத முடிவு!

  • June 29, 2023
  • 0 Comments

ராகம – கந்தானை பகுதியில் ஆணாக வாழ ஆசைப்பட்ட 14 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி தான் ஆணாக வாழ ஆசைப்படுவதாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் பெண்ணாக பிறந்து வாழ்வது மிகவும் வருத்தமாக உள்ளதாகவும், சிறுவனைப் போல் வாழ விரும்புகிறேன்’ என்றும் சிறுமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதோடு ஆண் நடிகர் ஒருவரை தான் அதிகம் விரும்புவதாகவும், ஆண் குழந்தையாக […]

விளையாட்டு

காயம் காரணமாக நாடு திரும்புகிறார் துஷ்மந்த சமீர

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். அவர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் தொடரில் இருந்து விலகியுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது. துஷ்மந்த சமீர உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் ஆரம்பச் சுற்றுகளில் சேர்க்கப்படவில்லை எனினும், சுப்பர் சிக்ஸர் சுற்றின் போது அவரை மீண்டும் அணியில் சேர்க்க கிரிக்கெட் தெரிவுக் குழு தயாராக இருந்தது. எவ்வாறாயினும், […]

ஐரோப்பா

குரான் எரிப்பு போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த சுவீடன் ; துருக்கி கண்டனம்

  • June 29, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் மசூதியில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது மசூதிக்கு வெளியே ஒரு போராட்டம் வெடித்தது. அங்கு சல்வான் மோமிகா(37) என்று ஈராக்கிய அகதி புனித குர்ஆனின் சில பக்கங்களை எரித்து உள்ளார். மேலும் புனித நூலை அவமதித்து உள்ளார். சல்வான் ஈராக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனுக்கு தப்பிச் சென்று ஸ்டாக்ஹோம் கவுண்டியில் உள்ள சோடெர்டால்ஜியில் உள்ள ஜெர்னா […]

ஆப்பிரிக்கா

சூடானில் சண்டை நிறுத்தம் அறிவிப்பு!

  • June 29, 2023
  • 0 Comments

சூடானில் இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் ஈத் அல்-ஆதாவின் முதல் நாளை முன்னிட்டு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துணை இராணுவத்தினரின் பிடியில் இருந்த 125 சூடான் இராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. சூடானில் ஜெனரல் அப்தெல்-ஃபத்தா புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும்>  ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் 11 வாரகாலமாக நடைபெற்று வருகின்றன. இந்த மோதலில் ஏறக்குறைய 3000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நாட்டின் […]

இலங்கை

கொழும்பு பிரபல மருத்துவமனையின் கூரையில் மீட்கப்பட்ட சத்திரசிகிச்சை கருவிகள்!

  • June 29, 2023
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் சத்திரசிகிச்சை கருவிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) கூட்டத்தின் போது கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன இது குறித்து தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார். எனவே சம்பவம் தொடர்பில் விசாரணை […]

இலங்கை

இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ  நியமிக்கப்பட்டுள்ளார். நாளை முதல் அமுலாகும் வகையில், ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, தற்போது பணிக்குழாம் பிரதானியாக செயற்பட்டு வருவதுடன், 1990ம் ஆண்டு இலங்கை விமானப்படையில் விமானியாக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

சந்திரமுகியின் கதவுகள் திறக்கப்படுகின்றன…. எப்போது தெரியுமா?

  • June 29, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் சந்திரமுகியும் ஒன்று. சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு பி. வாசு இயக்கத்தில் வெளியான “சந்திரமுகி” பெரிய அளவில் சூப்பர் ஸ்டாருடைய ஸ்டைல் இல்லாமல் வெளியான திரைப்படம். ஆனால் அவருடைய திரை வரலாற்றில் மாபெரும் வசூலை கண்ட படங்களில் அதுவும் ஒன்று. கடந்த 1993ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “மணிசித்ரதாழு” என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் சந்திரமுகி திரைப்படம். இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து […]

பொழுதுபோக்கு

பிரபல பாப் பாடகி மடோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிரபல அமெரிக்க பாப் பாடகி மடோனா பாக்டீரியா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிஷ் என்ற படத்தில் நடித்தபோது மடோனாவுக்கு கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மேலாளர் கை ஒசிரி தெரிவித்துள்ளதாவது, “மடோனாவுக்கு கடந்த 25ஆம் திகதி தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தங்க வைக்கப்பட்டார். தற்போது மடோனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் வான்கூவரில் ஜூலை 15ஆம் […]