இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா – மருத்துவர் விடுக்கும் எச்சரிக்கை
இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்று, உணவு மற்றும் நீரின் ஊடாக பரவக்கூடிய ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா (Listeria) நோயால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், லிஸ்டீரியா பக்றீரியா தொற்று அறிகுறியுடைய சந்தேகத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். […]