பொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் நடிப்பு அசுரன்

  • February 17, 2025
  • 0 Comments

நெல்ஸன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர். மாஸ் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் உலகளவில் மாபெரும் வசூலை குவித்து, தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக தகவல் வெளிவந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த மாதம் சன் […]

இலங்கை

இலங்கை : சந்தேகநபரை கண்டுப்பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

  • February 17, 2025
  • 0 Comments

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபரைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பலாங்கொடை காவல் பிரிவில் காலி-கொழும்பு பிரதான சாலையில் உள்ள உரவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் குறித்த இளைஞர் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெல்லேஜ் சமத் ஹர்ஷக பாதும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கண்டுப்பிடிக்க உதவுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி இளைஞர் பற்றிய தகவல் தெரிந்தால் கீழ் காணும் இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது. தலைமையக தலைமை […]

மத்திய கிழக்கு

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை பாதுகாக்க தயங்காது: வெளியுறவு அமைச்சகம்

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைப் பாதுகாத்து, அதைத் தொடர்ந்து செய்யத் தயங்காது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளை எதிர்கொள்வதாக உறுதியளித்த ஒரு நாளுக்குப் பிறகு இவ்வாறு கூறியுள்ளார். “ஈரானின் அமைதியான அணுசக்தித் திட்டம் தொடர்கிறது, கடந்த மூன்று தசாப்தங்களாக, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் உறுப்பினராக ஈரானின் உரிமைகளின் அடிப்படையில் உள்ளது.. கண்டிப்பாக இந்த விஷயத்தில் நாங்கள் எந்த பலவீனத்தையும் காட்ட […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஆபத்தான குடியேறிகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு : நாடுகடத்தப்படும் குற்றவாளிகள்!

  • February 17, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஆபத்தான குடியேறிகளை இனி காலவரையின்றி சிறையில் அடைக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கொலை குற்றவாளி உட்பட மூன்று வன்முறை குற்றவாளிகளை ஆஸ்திரேலியா விரைவில் நவ்ருவுக்கு நாடு கடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் டோனி பர்க் குற்றவாளிகளுக்கு 30 ஆண்டுகளுக்கு நவ்ருவிற்கான விசா வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நவ்ரு ஒப்பந்தம் இருந்தபோதிலும், நாடு கடத்த முடியாத குற்றவியல் பதிவுகளைக் கொண்ட 200 க்கும் மேற்பட்ட குடியேறிகள் ஆஸ்திரேலியாவில் இருப்பார்கள் என்று எதிர்க்கட்சித் […]

இலங்கை

இலங்கை வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதியை சாடியுள்ள சஜித்

இன்றைய வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதித் தேர்தல் மேடையில் முன்வைக்கப்பட்ட கொள்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை ஆராய வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். “Rata Anurata” கருத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட கொள்கைகள் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க உறுதியளிக்கும் அதே வேளையில், நாடு சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், IMF […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை : நிழலான பகுதிகளில் இருக்க அறிவுத்தல்!

  • February 17, 2025
  • 0 Comments

இலங்கையில் தற்போது நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பமான வானிலையே நிலவும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. வானிலை ஆய்வுத்துறை இன்று (17.02) மாலை வெளியிட்ட இந்த அறிவிப்பானது நாளை (18.02) வரை செல்லுப்படியாகும். அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் வெப்பக் குறியீடு, எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் இருக்க வேண்டும் […]

ஆசியா

தென் கொரியாவில் இடைநிறுத்தப்பட்டுள்ள டீப்சீக்கின் புதிய பதிவிறக்கங்கள் : தரவு பாதுகாப்பு நிறுவனம்

  • February 17, 2025
  • 0 Comments

உலக அளவில் பேசுபொருளாகியுள்ள சீனாவின் DeepSeek AI-ஐ தடை செய்து தென்கொரியா உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் Artificial Intelligence-ன் வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் ChatGPT, Gemini AI போன்ற அமெரிக்க ஏஐ-கள் உலக அளவில் பெரும் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் அவற்றிற்கு போட்டியாக சமீபத்தில் சீன நிறுவனம் வெளியிட்ட DeepSeek AI பல்வேறு வசதிகளுடன் உலகம் முழுவதும் பல பயனர்களை ஈர்த்து வருகிறது. பல நாடுகளில் அரசு துறைகளிலும் DeepSeek AI-ஐ பயன்படுத்துவதாக தகவல்கள் […]

உலகம்

நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதற்காக சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரிதம் சிங் , நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் . இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் நீதிமன்றம் அதிகபட்சமாக S$7,000 ($5,223; £4,148) அபராதம் விதித்தது. தண்டனை மற்றும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக சிங் கூறினார். தனி ஒரு வழக்கில் நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன தனது கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரயீசா கானை சிங் கையாண்ட விதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் இவை . சிங்கப்பூர் அதன் அடுத்த பொதுத் தேர்தலுக்குத் […]

இலங்கை

இலங்கையின் வரவு செலவு திட்டம் : வருவாயை விட செலவே அதிகம்!

  • February 17, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவு ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அது கூறுகிறது. அதன்படி, பட்ஜெட் இடைவெளி ரூ.2,200 பில்லியனாகும்.

பொழுதுபோக்கு

SK x ARM படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்

  • February 17, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் SK 23. இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும் ருக்மிணி வசந்த், பிஜு மேனன், வித்யுத் ஜாம்வல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை இதுவரை SKxARM என அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால், SKxARM படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு மதராஸி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் […]