வட அமெரிக்கா

அமெரிக்காவில் செயலிழந்த Chime செயலி : பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் பயணர்கள்!

  • February 21, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் தற்போது Chime செயலிழப்பை சந்தித்து வருகிறது, ஏராளமான பயனர்கள் செயலி சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். EDT இரவு 10 மணியளவில், DownDetector செயலிழந்ததாக 2,500க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றுள்ளது. பெரும்பாலான பயனர்கள் மொபைல் வங்கி மற்றும் நிதி பரிமாற்றங்களில் உள்ள சிக்கல்களை மேற்கோள் காட்டுகின்றனர். “இது இப்போது 30 நிமிடங்களுக்கும் மேலாக செயலிழந்துவிட்டது, எங்கள் பணத்தை அணுக வேண்டும்,” என்று ஒரு பயனர் தெரிவித்தார்.    

ஆசியா

தென் சீனக் கடலில் விமான விபத்து – மயிரிழையில் தவிர்க்கப்பட்ட பெரும் ஆபத்து

  • February 21, 2025
  • 0 Comments

தென் சீனக் கடலில் சீன கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று பிலிப்பைன்ஸ் அரசாங்க விமானத்துடன் மோதியுள்ளது. எனினும், கடைசி நேரத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து தவிர்க்கப்பட்டபோது இரண்டு விமானங்களுக்கும் இடையிலான தூரம் 3 மீட்டராகக் குறைந்ததாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. சீன ஹெலிகாப்டர் ஆபத்தான முறையில் பறந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் சீனாவிடம் இராஜதந்திர எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. தென் சீனக் கடலில் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்கள் […]

ஐரோப்பா

வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம், கடவுளின் படைப்புக்கு வரம்புகள் இல்லை – பாதிரியார் ஜோஸ் ஃபியூன்ஸ்!

  • February 21, 2025
  • 0 Comments

வேற்றுகிரகவாசிகள் “கடவுளிடமிருந்து மீட்பு” கோரக்கூடாது என்று வத்திக்கான் மூத்த அதிகாரி ஒருவர் பரிந்துரைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டில் ஜேசுட் பாதிரியார் ஜோஸ் ஃபியூன்ஸ் தெரிவித்த கருத்துக்கள், வேற்று கிரக வாழ்க்கையில் அதிகரித்து வரும் ஆர்வத்தின் மத்தியில் மீண்டும் வெளிப்பட்டுள்ளன. அப்போதைய வத்திக்கான் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்த பாதிரியார் ஃபியூன்ஸ், பிரபஞ்சத்தில் பிற உயிரினங்களின் சாத்தியக்கூறு கத்தோலிக்க நம்பிக்கைக்கு முரணானது அல்ல என்று கூறினார். “இது விசுவாசத்திற்கு முரணானது அல்ல, ஏனென்றால் கடவுளின் படைப்பு சுதந்திரத்திற்கு நாம் வரம்புகளை […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

பனாமா ஹோட்டலில் இலங்கை – இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா – உதவி கோர கதறல்

  • February 21, 2025
  • 0 Comments

பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்ட இலங்கை இந்தியர்களை அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது. அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பல்வேறு வெளிநாட்டினரை கண்டறிந்து, அவர்களை டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் நாடு கடத்தி வருகின்றது. நேரடியாக அமெரிக்காவில் இருந்து அதிகளவிலான மக்களை நாடு கடத்துவதில் சிக்கல் இருப்பதால் பனாமா நாட்டு வழியாக சிலரை நாடு கடத்த அமெரிக்கா நடவடிக்கை […]

ஐரோப்பா

UK – மென்செஸ்டர் விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம்!

  • February 21, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின்  மான்செஸ்டர் விமான நிலையத்தில் எல்லைப் படை அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழந்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் “அசாதாரண நடத்தையைக் காட்டியதற்காக” 27 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக  காவல்துறை நடத்தைக்கான சுயாதீன அலுவலகம் (IOPC) தெரிவித்துள்ளது. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் தடுப்பு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், மருத்துவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் துரதிஷ்ட வசமாக அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உள்துறை அலுவலகம் […]

மத்திய கிழக்கு

டெல் அவிவ் அருகே வெடித்த 03 பேருந்துகள் : சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்!

  • February 21, 2025
  • 0 Comments

டெல் அவிவ் அருகே மூன்று பேருந்துகள் வெடித்துள்ளன, இது ஒரு “பயங்கரவாத சம்பவம்” என்று இஸ்ரேலிய போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெல் அவிவ் நகருக்கு தெற்கே உள்ள பாட் யாம் நகரில் இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததாகவும், மூன்றாவது குண்டு அருகிலுள்ள ஹோலோன் நகரத்தில் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஹோலோனில் குறைந்தது ஒரு வெடிக்காத சாதனத்தைக் கண்டுபிடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கட்டத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்றும், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

குவாண்டம் கம்பியூட்டர் சீப்பின் புதிய அத்யாயம் – மைக்ரோசாப்ட்டின் மஜோரானா 1 அறிமுகம்

  • February 21, 2025
  • 0 Comments

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதியதாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஐ அறிமுகம் செய்தது. குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் கணினியை விட அதீத திறன் கொண்ட , நம்பத்தகாத பணிகளை செய்யும்படி உருவாக்கப்பட்ட கணினி வகைகள் ஆகும். அதில் பயன்படுத்தப்படும் வகையில் அதற்கென பிரத்யேகமாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஆன மஜோரானா 1-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த மஜோரானா 1 குவாண்டம் சிப்பானது டோபோலாஜிக்கல் கோர் கட்டமைப்பால் இயக்கப்படும் உலகின் முதல் குவாண்டம் சிப் ஆகும். இந்த […]

செய்தி விளையாட்டு

ரோஹித் கடைசியாக தவறவிட்ட சதங்கள் மற்றும் அரைசதங்கள்

  • February 21, 2025
  • 0 Comments

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபகாலமாக பார்மில் இல்லை என்கிற விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. ஆனால், கடைசியாக அவர் ஐசிசி நடத்திய 10 ஒரு நாள் போட்டியில் சில சதங்களையும், பல அரை சதங்களையும் தவறவிட்டுள்ளது பற்றி தெரியுமா? அவர் கடைசியாக விளையாடிய 10 (ஐசிசி) போட்டிகளில் 2 சத்தங்களை தவறவிட்டுள்ளார். அதைப்போல, 6 அரை சதங்களை தவறவிட்டு 40, 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியிருக்கிறார். அதன்படி, ஐசிசி ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் […]

உலகம்

உலக சந்தையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்த தங்கத்தின் விலை!

  • February 21, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை இப்போது ஒரு பாதுகாப்பான முதலீடாக எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி, ரொக்கமாக விற்கப்படும் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 2,945 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் மிக உயர்ந்த விலையை 9 முறை தாண்டியுள்ளது. கடந்த 30 நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 161 டாலர்களும், கடந்த ஆறு மாதங்களில் 407 டாலர்களும் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் கருணைக் கொலை செய்யப்படவுள்ள டால்பின்கள்

  • February 21, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கடற்கரை மணலில் சிக்கிய டால்பின்கள் கருணைக் கொலை செய்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடற்கரை மணலில் சிக்கிய ஏராளமான டால்பின்களை மோசமான வானிலை காரணமாக மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவை கருணைக்கொலை செய்யப்பட்டு கடற்கரையில் புதைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கில்லர் திமிங்கலம் போல் இருக்கும் இந்த டால்பின்கள், டாஸ்மேனியா தலைநகர் ஹோபார்ட்டில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆர்தர் நதி முகத்துவாரம் அருகே அதிக எண்ணிக்கையில் […]