செய்தி

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • February 23, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் வீதி மரணங்களை ஒழிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் வீதி விபத்துகளில் 1,300க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதத்தில் மட்டும் ஆஸ்திரேலியாவில் 114 வீதி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட வீதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கப்போவதாகக் கூறியுள்ளது. கடுமையான போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

மெக்சிகோ கடல் பகுதியில் கரை ஒதுங்கிய Doomsday மீன்கள் – பேரழிவுக்கான அறிகுறி என அச்சம்

  • February 23, 2025
  • 0 Comments

மெக்சிகோ கடல் பகுதியில் Doomsday மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ (Oar) மீன்கள் கரை ஒதுங்கியுள்ளது. வரப்போகும் பேரழிவுகளின் அறிகுறியாக என கூறி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள பாஜா கலிபோர்னியா சுரின் எனும் ஆழமற்ற நீர்நிலைகளின் கரையில், ஆழ் கடலில் மட்டுமே காணப்படும் நீள ரிப்பன் போன்ற உடலமைப்புடன் ஆரஞ்சு நிற துடுப்புகளுடன் கூடிய ஓர் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் அரிதாகவே காணப்படும் இந்த மீன்களை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் 90 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

  • February 23, 2025
  • 0 Comments

இலங்கையில் தற்போது அத்தியாவசிய மருந்துகள் உட்பட சுமார் 90 வகையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார். அரச வைத்தியசாலைகளில் இன்சுலின்கள், குறைந்த அளவிலேயே கையிருப்பில் உள்ளது. மருத்துவ விநியோக பிரிவின் தகவலுக்கமைய, விநியோகிப்பதற்கு முடியாத பல மருந்துகள் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, கொலஸ்ட்ரோலுக்கான மருந்துகள் உள்ளிட்ட அவசியமான […]

வட அமெரிக்கா

கறுப்பின இராணுவ அதிகாரி நீக்கம்: சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப் – பென்டகனில் 5,400 ஊழியர்கள் நீக்கம்

  • February 23, 2025
  • 0 Comments

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் கறுப்பின உயர் அதிகாரி சார்லஸ் கியூ பிரவுன் ஜூனியரை ஜனாதிபதி டொனால் டிரம்ப் பதவி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. டிரம்ப் பதவியேற்ற பிறகு அவரது பல அதிரடி முடிவுகள் சர்சையாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிரம்ப் நிர்வாகம், ராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் விமானப்படை ஜெனரல் சி.க்யூ.பிரவுன் ஜூனியரை நேற்று முன் பணிநீக்கம் செய்து அறிவித்தது. பிரவுன், பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக அதிபருக்கு ஆலோசனை வழங்கும் கூட்டு பணியாளர்கள் குழு […]

மத்திய கிழக்கு

விடைபெறும் போது ஹமாஸ் படையினருக்கு அன்பு முத்தம் கொடுத்த இஸ்ரேலிய பிணைக் கைதி

  • February 23, 2025
  • 0 Comments

பிணைக் கைதி ஒருவர் ஹமாஸ் படையினறின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மேலும் 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாத படையினர் விடுவித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்து வருகின்றனர். பதிலுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது. அண்மையில் […]

வட அமெரிக்கா

அமெரிக்க அரச ஊழியர்கள் பணி நீக்கம் – மிரட்டல் விடுத்த எலோன் மஸ்க்

  • February 23, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் அரசாங்க ஊழியர்கள் தாங்கள் செய்த வேலையை விவரிக்க தவறினால் வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எலோன் மஸ்க் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவில் அரசாங்க செயல்திறன் துறையை அவர் வழிநடத்துகிறார். X சமூக ஊடகத் தளத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டது. மத்திய அரசாங்க ஊழியரணியைச் சீரமைக்கவும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தம்முடைய சமூக ஊடக தளமான Truth Socialஇல் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இந்தியாவில் முடக்கப்பட்ட 80 லட்சத்திற்கும் அதிகமான WhatsApp கணக்குகள்!

  • February 23, 2025
  • 0 Comments

இந்தியாவின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களின் ஒன்றான வாட்ஸ்அப், 8.4 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, ஒரு மாதத்தில் அந்த கணக்குகளை தடை செய்துள்ளது. மோசடி நடவடிக்கைகளுக்கு வாட்சப் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வரும் செயலால் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக மெட்டாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 4(1)(d) மற்றும் பிரிவு 3A(7) […]

விளையாட்டு

பாகிஸ்தானை தோற்கடிக்கும் முனைப்பில் இந்தியா

  • February 23, 2025
  • 0 Comments

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதற்கு பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோத உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடாததால், ஹைபிரிட் முறையில் துபையில் இந்திய ஆட்டங்கள் நடைபெறுகின்றன. எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய-பாக். ஆட்டம்: இந்நிலையில் துணைக் கண்டத்தின் பரம வைரி அணிகளான இந்தியா-பாகிஸ்தான் […]

வட அமெரிக்கா

எலான் மஸ்க் மகனின் செயல் – அமெரிக்காவில் 145 ஆண்டு பாரம்பரியத்தில் மாற்றம்?

  • February 23, 2025
  • 0 Comments

அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் 145 ஆண்டுகள் பழைமையான மேசையை மாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். எலான் மஸ்கின் மகன் எக்ஸ் தனது மூக்கைத் துடைத்து அலுவலக மேசையில் தடவியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் ஓவல் அலுவலகத்துக்கு அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ்க் தனது 4 வயது மகன் எக்ஸ்-ஏ-ஷியை (X Æ A-Xii) பிப்ரவரி 11ம் தேதி தன்னுடன் அழைத்துச் சென்றார். டொனால்ட் டிரம்ப்புடன் சந்திப்பின்போது, செய்தியாளர்களுடன் […]

இலங்கை

இலங்கையில் பல பகுதிகளில் நாளை முதல் காலநிலையில் மாற்றம்!

  • February 23, 2025
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளில் நாளை முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். காலி, […]