இலங்கை சந்தையில் கிடைக்கும் சரும பூச்சுகளால் ஆபத்து – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை சந்தையில் கிடைக்கும் பல முக மற்றும் சரும பூச்சுகளில் ஆபத்தை விளைவிக்கும் அதிகளவு கன உலோகங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகூட பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளை மீறி, நுகர்வோருக்குக் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் வகையில் கன உலோகங்கள் உள்ளடங்கியுள்ளதாக, அந்த சபை தெரிவித்துள்ளது. குறித்த தயாரிப்புகளின் பெயர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட உலோக செறிவுகளைக் காட்டும் அறிக்கையொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை […]