ஐரோப்பா

நேட்டோ உறுப்பினர் பதவிக்கு ஈடாக அதிபர் பதவியை விட்டுக்கொடுக்க தயார் ;ஜெலென்ஸ்கி

  • February 24, 2025
  • 0 Comments

உக்ரேனை நேட்டோ உறுப்பினராக்கினால் அதிபர் பதவியிலிருந்து தாம் விலகத் தயாராக இருப்பதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அவரைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்து பிப்ரவரி 24ஆம் திகதியுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டினை அதிபர் டிரம்ப் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.அதற்கு முன்னதாக அதிபர் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச […]

ஐரோப்பா

கிரெம்ளினுடன் தொடர்புடைய ரஷ்ய தன்னலக்குழுக்களுக்கு தடை விதித்த இங்கிலாந்து!

  • February 24, 2025
  • 0 Comments

கிரெம்ளினுடன் தொடர்புடைய ரஷ்ய தன்னலக்குழுக்கள் இப்போது இங்கிலாந்தில் இருந்து தடை செய்யப்படலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. விளாடிமிர் புதின் உக்ரைன் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி புதிய தடைகள் தொகுப்பின் ஒரு பகுதியாக இவை வந்துள்ளன. ரஷ்ய அரசுடன் தொடர்புடைய “உயரடுக்குகள்” இப்போது புதிய தடைகளின் கீழ் இங்கிலாந்துக்குள் நுழைவதைத் தடுக்க முடியும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கிரெம்ளினுக்கு “குறிப்பிடத்தக்க ஆதரவை” வழங்குபவர்கள், ரஷ்ய அரசுக்கு “குறிப்பிடத்தக்க அந்தஸ்து அல்லது செல்வத்தை” வழங்க வேண்டியவர்கள் மற்றும் […]

ஐரோப்பா

வெடிகுண்டு மிரட்டல் – இத்தாலியில் அவசரமாகத் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

  • February 24, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலிருந்து புது டில்லிக்குச் சென்றுகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் இத்தாலியின் ரோம் நகரத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு அச்சுறுத்தலால் இவ்வாறு விமானம் ரோம் நகரத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 199 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானத்துக்குப் பாதுகாப்பாக அதற்கு முன்னர் இத்தாலிய ஆகாயப்படையின் இரு விமானங்கள் சென்றுள்ளது. விமானம் சோதனை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் புறப்பட அனுமதி வழங்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்தது. ஆனால் வெடிகுண்டு மிரட்டல் குறித்த மேல் விவரங்களை நிறுவனம் பகிரவில்லை. விமானம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அடுத்த ஆண்டு புதிய கல்வி சீர்திருத்தம் – பிரதமர் அறிவிப்பு

  • February 24, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தரம் 1 மற்றும் தரம் 6 க்கான புதிய கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தற்போதைய பாடசாலை முறையில் படிக்கும் மாணவர்களை அடக்குமுறை கல்வி முறையிலிருந்து விடுவிக்க பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். இதற்கிடையில், கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் உயர்கல்விக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகிறார். மாற்றுத்திறனாளி சமூகத்தினருக்கான கல்வியை […]

பொழுதுபோக்கு

என்ன பத்தி தப்பா பேசுறத யாரும் நம்பாதீங்க…வைரமுத்து

  • February 24, 2025
  • 0 Comments

என்னை அமுக்க பார்கிறார்கள் என கவிப்பேரரசு வைரமுத்து கூறி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகின்றது. என்ன பத்தி தப்பா பேசுறத யாரும் நம்பாதீங்க எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னரும் பிரபல பாரடகி வைரமுத்துவைப்பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மீண்டும் தீவிர பாதுகாப்பு?

  • February 24, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட, பராமரிக்கப்பட அல்லது குறைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மதிப்பாய்வுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொழுதுபோக்கு

“ஜனநாயகன்” விஜய்யின் கடைசி படம் இல்லை? பிரபல இயக்குநர் புதிய தகவல்

  • February 24, 2025
  • 0 Comments

நடிகர் விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துவிட்டார். அரசியல் சென்றுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளார். இது அவருடைய சினிமா ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. ஒரு பக்கம் அவருடைய கடைசி படம் ஜனநாயகன் என கூறப்பட்டாலும், மறுபக்கம் அவர் மற்றொரு படமும் நடிப்பார், அது தளபதி 70 என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தளபதி விஜய்யிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில், விஜய் மீண்டும் சினிமாவிற்கு […]

ஐரோப்பா

ஜெர்மனியின் அடுத்த சான்ஸ்லராகும் பிரைட்ரிச் மெர்ஸ்

  • February 24, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் அடுத்த சான்ஸ்லராக பிரைட்ரிச் மெர்ஸ் (Freidrich Merz) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பொதுத்தேர்தலில் அவரது கட்சி 28.5 சதவீத வாக்குளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. எனினும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சவால்மிக்க பணியில்மெர்ஸ் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. அதுவரை ஜெர்மானிய சான்ஸ்லராக ஒலாப் ஷோல்ஸ்இன்னும் சில மாதங்கள் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கடந்த 2 வருடங்களாக ஜெர்மனியில் நீடிக்கும் பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்யும் பணியில் பின்னடைவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் ஐரோப்பிய […]

வாழ்வியல்

சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதை எச்சரிக்கும் ஆரம்ப அறிகுறிகள்

  • February 24, 2025
  • 0 Comments

நம் உடலின் முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் அடங்கும். சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், அது தீவிர பிரச்சனையாக உருவெடுத்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சிறுநீரகப் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அதனை குணப்படுத்துவதும் எளிதாகும். சிறுநீரகத்தின் செயல்பாடு இரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை அகற்றி, சுத்தமான இரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. பல நேரங்களில், சில மருந்துகளின் பக்க விளைவுகள், உடல் நல பிரச்சனைகள் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

இரட்டை நிமோனியா காய்ச்சல் – போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்

  • February 24, 2025
  • 0 Comments

போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து இரண்டாவது நாளாகக் கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. இரட்டை நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்குச் சிறுநீரகச் செயல்பாட்டில் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளதென வத்திகான் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் சுவாசப் பிரச்சினையை எதிர்நோக்கியதால் 88 வயது போப்பிற்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டியிருந்தது. அதன் பிறகு அவருடைய நிலை சற்று மேம்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இம்மாதம் 14ஆம் திகதி ரோமின் Gemelli மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை மோசமாய் இருப்பதாக வத்திகன் முதல் முறையாக நேற்று […]