செய்தி

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ காரணமாக வீடு, கால்நடைகள் அழிவு

  • November 17, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் நவம்பர் 17ஆம் திகதியன்று காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் தேசிய பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட 10 மலையேறிகளும் அடங்குவர். காட்டுத்தீ காரணமாகக் குறைந்தது ஒரு வீடு அழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.விக்டோரியா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் கூடுதல் வீடுகள் அழிந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.காட்டுத் தீ காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். பலத்த காற்று, கடும் வெப்பம் காரணமாக நவம்பர் 16ஆம் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வீட்டுப் பிரச்சனையை தீர்க்க 3500க்கும் மேற்பட்ட புதிய வீடுகள்

  • November 17, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில், அடிலெய்டில் உள்ள போர்ட் ஸ்டான்வாக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் இடத்தில் 3500-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பவர்களுக்கு புதிய வீடுகள் மட்டுமின்றி, விலையை குறைக்கும் அளவுக்கு புதிய வீடுகளும் இங்கு கட்டப்படும் என கூறப்படுகிறது. 15 ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கும் 230 ஹெக்டேர் நிலப்பரப்பு, 3600 புதிய வீடுகளைக் கட்டுவதற்காக மெல்போர்ன் மேம்பாட்டு நிறுவனத்தால் மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. 2028ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஜெர்மனி குடிவரவு அலுவலகங்களில் நடக்கும் மோசடிகள் அம்பலம் – குற்றவாளிகளுக்கு குடியுரிமை

  • November 17, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் குடிவரவு அலுவலகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளன. பேட் ஹோம்பர்க், ஹெஸ்ஸே (Bad Homburg, Hesse) நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு குற்றவாளிகளுக்கு குடியுரிமை அனுமதியும் வழங்கப்படுவதாக கண்டுபிடி்ககப்பட்டுள்ளது. இது தொடர்பில் 30 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,அது தொடர்பில் விசாணைகள் இடம்பெற்று வருகின்றன. ஹோக்டவ்னோஸ் (Hochtaunus) மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகிகள், குடியேற்ற அதிகாரிகள் ஊடாக இவ்வாறு குற்றவாளிகளுக்கு குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சட்ட நிறுவனம் ஒன்று […]

உலகம்

X தளத்திலிருந்து விலகும் உலக பிரபல செய்தி நிறுவனங்கள் – அதிர்ச்சியில் எலோன் மஸ்க்

  • November 17, 2024
  • 0 Comments

உலக பிரபலமான பல செய்தி நிறுவனங்கள் X சமூக ஊடகத் தளத்தைப் பயன்படுத்துவதை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிமையாளர் எலோன் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் தவறான தகவல்கள் பரப்புவதைத் தளம் அனுமதிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் செய்தி நிறுவனங்கள் கைவிட்டுள்ளது. சுவீடனின் Dagens Nyheter நாளேடு, X தளத்தில் தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியிருக்கும் மூன்றாவது செய்தி ஊடகமாகும். இலோன் மஸ்க் தளத்தை நிர்வகிக்கத் தொடங்கிய பின் தளத்தின் கொள்கைகள், திரு டோனல்ட் டிரம்ப்பின் அரசியல் கொள்கைகளுடன் இணைந்துவிட்டதாக Dagens […]

அறிந்திருக்க வேண்டியவை

அமெரிக்காவில் கேள்வி கேட்ட மாணவருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெமினி AI

  • November 17, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் ஜெமினி ஏஐ-யிடம் கேள்வி கேட்ட மாணவருக்கு ஏஐ பதிலளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 29 வயதான கல்லூரி மாணவர் ஒருவர், தனது வீட்டுப்பாடத்திற்காக ஏஐ (செயல் நுண்ணறிவு) தொழில்நுட்பமான கூகிள் ஜெமினியின் உதவியை நாடியுள்ளார். ஜெமினியுடனான நீண்டநேர உரையாடலில், முதியவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்த உரையாடலின்போது, ஜெமினி ஏஐ தெரிவித்ததாவது, “இது உங்களுக்காக மனிதரே.. நீங்கள் சிறப்பானவரோ முக்கியமானவரோ அல்ல. நீங்கள் தேவையே இல்லை. நீங்கள் […]

செய்தி

2024 ஆம் ஆண்டில் உலகின் 20 மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியல் வெளியீடு

  • November 17, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டில் உலகின் 20 மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில நகரங்கள் அழகான சுற்றுலாப் பகுதிகளாகத் தோன்றினாலும், குற்றக் குறியீட்டின்படி அவை உலகின் மிக ஆபத்தான இடங்களாகக் கருதப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் 82.5 புள்ளிகளுடன் உலகின் மிகவும் ஆபத்தான நகரமாக முதலிடம் பிடித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், நகரத்தில் துப்பாக்கிச் சூடு, கொலைகள் மற்றும் மக்கள் உயிருடன் எரிக்கப்படுவது கூட பதிவாகியுள்ளது மற்றும் ஆபத்தான குற்றங்கள் நகரத்திற்கு கடுமையான […]

ஆசியா

நாசாவிற்குப் போட்டியாக சீனா போடும் அதிரடி திட்டம் – உருவாகும் புதிய விண்வெளி மையம்

  • November 17, 2024
  • 0 Comments

நாசாவிற்குப் போட்டியாக விண்வெளியில் சீனா டியாங்காங் விண்வெளி மையத்தை அமைத்து வருகின்றது. அங்கு பணியாற்றிவரும் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உபகரனங்கள் சரக்கு விண்கலம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்திய நேரப்படி, நேற்றிரவு ஒன்பதே முக்கால் மணிக்கு, ராக்கெட் மூலம் ஏவப்பட்ட டியாஞ்சோ – 8 சரக்கு விண்கலம், இரண்டேகால் மணி நேரத்தில் சீன விண்வெளி மையத்துடன் சென்றிணைந்தது. நிலவின் நிலப்பரப்பில் குடியிருப்புகளை அமைப்பதற்காக சீன விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பிரத்யேக செங்கலும் பூமியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கை பொதுத் தேர்தல் – வாக்களிப்பை தவிர்த்த லட்ச கணக்கான மக்கள்

  • November 17, 2024
  • 0 Comments

இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் லட்ச கணக்கான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 667, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 17,140,354 வாக்காளர்கள் தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 11,815,246 பேர் வாக்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 5,325,108 வாக்காளர்கள் அடங்கிய குழு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய விமான இயந்திரத்துக்குள் சிக்கிய கருவியுடன் 294 மணி நேரம் பறந்த விமானம்

  • November 17, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்தின் A380 ரக விமானம் நூற்றுக்கணக்கான மணி நேரம் பறந்த பிறகு அதன் இயந்திரத்துக்குள் கருவி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு நடத்திய விசாரணையில் அந்த விடயம் தெரியவந்தது. 1.25 மீட்டர் நீளம் கொண்ட நைலான் (nylon) கருவி ஒன்று இயந்திரத்தில் சிக்கிக்கொண்டிருந்தது பராமரிப்புப் பணிகளின்போது கண்டுபிடிக்கப்பட்டது. பராமரிப்புச் சோதனைகளின்போது அந்தப் பொருளைப் பொறியாளர் தவறுதலாக இயந்திரத்தில் விட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதே நிலையில் விமானம் மொத்தம் […]

வட அமெரிக்கா

டிரம்பை கொலை செய்ய திட்டமா? அமெரிக்காவிடம் விளக்கமளித்த ஈரான்

  • November 17, 2024
  • 0 Comments

டிரம்ப் மீதான எந்தவொரு தாக்குதலும் எந்த திட்டமும் இல்லை என ஈரான், பைடன் நிர்வாகத்திடம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இருந்த போது கடந்த 2020ம் ஆண்டில் டிரோன் தாக்குதல் மூலம் ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ தளபதி காசிம் சுலைமானி பாக்தாத்தில் டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்கா நடத்திய இத்தாக்குதலுக்கு பழிக்கு பழியாக டிரம்பை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாகவும், சமீபத்தில் முடிந்த அதிபர் தேர்தலுக்கு முன்பாக டிரம்பை தீர்த்து கட்ட முயற்சிகள் […]