தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

  • April 10, 2023
  • 0 Comments

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பாக ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருகை தரும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பன குறித்து இந்த ஒத்திகையில் நிகழ்ச்சி வாயிலாக காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்வினை […]

இலங்கை

மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி; தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது

  • April 10, 2023
  • 0 Comments

வீடொன்றில் 06 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயும், தாயின் கள்ளக்காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் பின்கெல்ல பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக ஹிரண பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலுடன் வசித்து வந்த குழந்தை பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் மருத்துவ உதவி வழங்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குழந்தை இதற்கு முன்னர் பல தடவைகள் தாயின் கள்ளக்காதனால் உடல்ரீதியாக தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. செவித்திறன் மற்றும் பேச்சு […]

இலங்கை

யாழில் நடந்த சோகம் – பெண்ணின் உயிரை பறித்த ஆட்டிறைச்சி

  • April 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார். “கடந்த 25ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது. அதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதி வரை இறங்கி சிக்கிக்கொண்டுள்ளது. மறுநாள் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். […]

இலங்கை

மின்கட்டணம் குறித்து நாடாளுமன்றத்தில் அரங்கேறிய வாக்குவாதம் !

  • April 10, 2023
  • 0 Comments

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியில்லாமல் மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சஜித் பிரேமதாகச எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார் என தெரியவந்துள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அதிகாரிகளின் ஆதரவுடனேயே மின்சார கட்டணத்தை அதிகரித்திருந்தாக கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். ஒருவர் எதிர்ப்பு என்பது ஒட்டுமொத்த ஆணைக்குழுவின் எதிர்பாக அதனை கருத முடியாது என்றும் கஞ்சன […]

இலங்கை

மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

  • April 10, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது. இன்று இந்த உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், எதிர்வரும் ஏப்ரல் 20 முதல் 30 ஆம் திகதி வரையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே […]

இலங்கை

இலங்கை முடங்கும் அபாயம்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் மார்ச் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக மார்ச் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அரிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் […]

இலங்கை

இந்த மாதம் கடன் பெறும் இலங்கை – ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை

  • April 10, 2023
  • 0 Comments

Llஇலங்கைக்கு இந்த மாதத்தின் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போதைய பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று நிகழ்த்திய விசேட உரையில் அவர் இதனை தெரிவித்தார். சீனாவின் கடன்மறுசீரமைக்கான எழுத்துமூல உத்தரவாதம் நேற்றிரவு தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும், அது தொடர்பில், மத்திய வங்கியின் ஆளுநருடன் கலந்துரையாடி அதனை சர்வதேச நாணய […]

இலங்கை

இலங்கை பாடசாலை மாணவிக்கு சிறுவன் செய்த அதிர்ச்சி செயல்

  • April 10, 2023
  • 0 Comments

தம்புத்தேகம பிரதேசத்தில் 15 வயதான பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவியின் நண்பி, மாணவிக்கும் இளைஞன் ஒருவருக்கும் இடையில் இருக்கும் காதல் தொடர்பு குறித்து மாணவியின் தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தாய் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தம்புத்தேகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவியின் பெற்றோர் வியாபாரத்திற்காக […]

இலங்கை

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட பணம்!!! யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல்

  • April 10, 2023
  • 0 Comments

கனடாவில் இருந்து 2 இலட்ச ரூபாய் காசினை பெற்றுக்கொண்டு , யாழ்ப்பாணம் பனிப்புலத்தில் தாக்குல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ,  பனிப்புலம் பகுதியில் கடந்த 26ஆம் திகதி காரில் சென்ற நபரை வழிமறித்த இருவர் , அவர் மீது வாள் வெட்டு தாக்குலை மேற்கொண்டனர். அத்துடன், கார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், சங்கானை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். […]

இலங்கை

மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்ற கிளிநொச்சி பெண்ணை காணவில்லை

  • April 10, 2023
  • 0 Comments

மத்திய கிழக்கு நாட்டிற்கு வீட்டுப்  பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார். பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே மத்திய கிழக்கு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் அவரது கணவர் தெரிவிக்கையில், “கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டுப்பணிக்காக மனைவி மத்திய கிழக்கிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து கடந்த […]