இலங்கை

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவித்தல்!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்தார். வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதிப் பொதி குறித்த முதலாவது மீளாய்வு 6 மாதங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு முன்னர் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 20 […]

இலங்கை

நியூசிலாந்து செல்ல முயற்சித்த 6 இலங்கையர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையர்கள் 6 பேர் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயன்ற போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள 3 அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த அகதிகளுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. குறித்த நபர்கள் படகு மூலம் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக பொலிஸாரின் கியூ பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பூம்புகாரில் உள்ள படகு உரிமையாளர் ஒருவரிடம் படகு […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – தொலைபேசியில் பேசியதால் காதை பறிக்கொடுத்த நபர்

  • April 10, 2023
  • 0 Comments

பதுளையில் பாதசாரி கடவையில் வைத்து, கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரின் காதை நபர் ஒருவர் துண்டித்த சம்பவம் பதிவாகியுள்ளது. பதுளை – மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் வீதியைக் கடக்கும் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதசாரி கடவையின் நடுவில் வைத்து தனது கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்குப் பதிலளித்தமையால், கோபமடைந்த அதே பாதசாரி கடவையை கடந்த மற்றுமொரு நபர், தாம் வைத்திருந்த கத்தியினால் அவரின் காதை துண்டித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் விசேட தேவையுடையவர் என்றும் அவர் மருத்துவமனையில் […]

இலங்கை

சாதாரண தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்க நேரிடும்

  • April 10, 2023
  • 0 Comments

உயர்தரப் பொதுத் தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை திட்டமிட்டபடி முடிக்க முடியாவிட்டால் சாதாரண தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புத்திக பத்திரன எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தற்போது நிலவும் பொருளாதாரச் சிக்கலைக் கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்படும் தினசரி உதவித் தொகை போதாது எனக்கூறி உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதில் ஆசிரியர்கள் காலதாமதம் செய்தனர். […]

இலங்கை

கொழும்பு புறநகர் பகுதியில் இளம் யுவதிக்கு நோர்ந்த கொடுமை

  • April 10, 2023
  • 0 Comments

போக்குவரத்து வசதி செய்து தருவதாக கூறி 18 வயது யுவதியை லொறியில் ஏற்றி வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று வாத்துவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. சந்தேகநபர்கள் வாத்துவ பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பலமுறை வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி மற்றும் மற்றுமொருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட யுவதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை பகுதியிலுள்ள கடையொன்றில் பணிபுரியும் […]

இலங்கை

உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு பௌத்தசாசன செயலணி வேண்டுகோள்!

  • April 10, 2023
  • 0 Comments

தேசிய மற்றும் இராஜதந்திர ஸ்திரதன்மைக்காக  உள்ளூராட்சி   தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடத்தவேண்டும் என பௌத்தசாசன செயலணி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பௌத்தசாசன செயலணி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. அமைச்சர்கள் எண்ணிக்கையை 15ஆக மட்டுப்படுத்தவேண்டும் எனவும் அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர்களை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஆடம்பர பொருள் இறக்குமதியை நிறுத்தவேண்டும் எனவும் அந்த நிதியை தேர்தலிற்கு செலவிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை

இளைஞரின் காதை அறுத்த நபர்

  • April 10, 2023
  • 0 Comments

கூரிய ஆயுதத்தால் காது மடலை வெட்டியதில் பலத்த காயமடைந்த இளைஞன் இன்று (09) மத்திகஹதென்ன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மடோல்சிம குருவிகொல்ல கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஊனமுற்ற இளைஞரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கையடக்கத் தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்துக்கொண்டிருந்த இளைஞன் வீதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றுமொரு நபர்  தாக்கியதுடன், காது மடலை கத்தியால் அறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் காயமடைந்தவரின் தாயார் மடோல்சிம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், மடோல்சிம பொலிஸார் […]

இலங்கை

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையிடம் இருந்த கையிருப்பின் பெறுமதி 2 ஆயிரத்து 217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கையிருப்பில் இருந்த 2 ஆயிரத்து 121 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 4.5 வீத அதிகரிப்பாகும். உத்தியோபூர்வ கையிருப்பு சொத்துகளில் உள்ளடக்கப்படும் அந்நிய செலாவணி கையிருப்பதாக 2 ஆயிரத்து 65 மில்லியன் டொலர்களில் இருந்து 2 ஆயிரத்து 183 மில்லியன் டொலர்களாக […]

இலங்கை

இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான்!

  • April 10, 2023
  • 0 Comments

அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்கவுள்ளது. இதன்படி ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சி திட்டத்திற்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகிறது. இந்த நன்கொடையானது நான்கு மாத காலத்திற்கு சோளம் மற்றும் சோயா பீன்ஸ் கொள்வனவு மூலம் திரிபோஷா போன்ற வலுவூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக இலங்கைக்கு ஜப்பான் இதுவரை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை […]

இலங்கை

8 ஆம் திகதிக்குள் உரிய தீர்வு வேண்டும் – எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்!

  • April 10, 2023
  • 0 Comments

தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவிற்கு மத்தியில் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியும் , வட்டி வீதம் மற்றும் வரி என்பவற்றைக் குறைக்குமாறும் வலியுறுத்தி இவ்வாறு தொழிற்சங்க  நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார துற, கல்வித்துறை , பல்கலைக்கழகங்கள், அரச நிர்வாக சேவை, வங்கி, துறைமுகம், பெற்றோலியத்துறை, நீர் வழங்கல் துறை, தபால் சேவை உள்ளிட்ட அரச மற்றும் அரச […]