இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு கொடுப்பனவு – 1.1 மில்லியன் விண்ணப்பங்கள் தெரிவு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் நலன்புரி கொடுப்பனவிற்கான 3.4 மில்லியன் விண்ணப்பங்களில் கிடைத்துள்ளது. அதில் இருந்து 1.1 மில்லியன் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வருமை நிலையில் உள்ள மற்றும் சமூர்த்தி கொடுப்பனவை பெறுபவர்களுக்கு நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்காம் கடந்த வாரங்களில் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 1.1 மில்லியன் பேருக்கு நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

இலங்கை செய்தி

இலங்கையில் வீடொன்றுக்குள் பெண்கள் செய்த அதிர்ச்சி- சுற்றிவளைத்த பொலிஸார்

  • April 11, 2023
  • 0 Comments

கடுகன்னாவ, கந்தகம பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தேங்காய் விற்கும் போர்வையில் பாரிய அளவில் போதை வஸ்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதாள உலக கோஷ்டியினர் என சந்தேகிக்கப்படும் மூன்று பெண்கள் உட்பட 5 பேரை கடுகன்னாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றிவளைத்த போது சந்தேக நபர்களிடம் இருந்து 33 கைத்தொலை பேசிகள், 3 வேன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 9 வாகனங்களுக்கான வருமானம் […]

இலங்கை செய்தி

தென்னிலங்கையில் நடந்த கோர விபத்து!!! 300 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார்

  • April 11, 2023
  • 0 Comments

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த சியான் குமாரி ரயிலுடன் கார் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அஹங்கம – வல்ஹெங்கொட பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும் 35 வயதுடைய இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அந்த இடத்தில் ரயில்வே கேட் இல்லை, மணி மற்றும் லைட் சமிக்ஞைகள் ஒளிரும் போது கார் கடவைகை்குள் நுழைந்ததுடன் ரயிலில் மோதி சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. விபத்தில் உயிரிழந்த இருவரும் உறவினர்கள் எனவும், குறித்த பெண் […]

இலங்கை செய்தி

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய உயிரினங்கள்

  • April 11, 2023
  • 0 Comments

அம்பாறை – அத்தகல காப்புக்காடு மற்றும் குருநாகல் – கல்கிரிய வனப் பகுதியில் இரண்டு புதிய கெக்கோ இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அத்தகல காப்புக்காட்டில் காணப்படும் இனத்திற்கு ஜயவீர என்றும், கல்கிரிய சரணாலயத்தில் காணப்படும் இனத்திற்கு நாணயக்கார என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த இனமானது சூழலியலாளர்களான சாந்தசிறி ஜயவீர மற்றும் ஆனந்த லால் நாணயக்கார ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கெக்கோக்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன மற்றும் அவற்றின் தொகை குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை செய்தி

11 இலட்சம் நலன்புரிக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது

  • April 11, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்படும்  நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக தற்போது நடைபெற்று வரும் தகுதியானவர்களை அடையாளங் காணும் நடவடிக்கையில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள  தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களின் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கான தகுதி சரிபார்த்தல் பணிகள்  […]

இலங்கை செய்தி

பிரதமர் மற்றும் ஆளுனர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு

  • April 11, 2023
  • 0 Comments

340 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலமானது மார்ச் 19ஆந் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதன் காரணமாக, அந்த நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பில், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கிடையேயும் ஆளுனர்களுக்கிடையேயுமான கலந்துரையாடலொன்று, அலரி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் ஆளுனர்களான டிகிரி கொப்பேகடுவ (சப்பிரகமுவ), வசந்த கரன்னாகொட (வடமேல்), எம்.ஜே.எம்.முசம்மில் ( ஊவா ), மகிபால ஹேரத் (வடமத்திய), விலீ கமகே (தெற்கு), லலித் யு.கமகே (மத்திய), அநுராதா யகம்பத் (கிழக்கு), ரொஷான் குணதிலக (மேல்), ஜீவன் தியாகராஜா (வடக்கு) […]

இலங்கை செய்தி

வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை!

  • April 11, 2023
  • 0 Comments

நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காத காரணத்தினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க அரச அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தீர்மானித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) எழுத்து மூலம் திணைக்களத்திற்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரியிடம் அரசாங்க அச்சக அலுவலகம் பல தடவைகள் கோரிக்கை […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிகரிக்கும் மாபியாக்களின் செயற்பாடு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் நகை செய்யும் இடங்களில் உள்ள தங்கக்கழிவுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வருகை தரும் இந்தியர்கள் இந்த வர்த்தக நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் மாபொல பகுதியினை மையமாகக்கொண்டு இந்த வர்த்தக நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் முறையான அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இவ்வாறான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் இந்தியர்களை இலங்கையினைச் சேர்ந்த சிலர் அச்சுறுத்துவதாகவும், அவர்களிடம் பெருந்தொகை பணத்தினை […]

இலங்கை செய்தி

யாழ் உரும்பிராய் பகுதியில் மூன்று சிறுமிகள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சிறுமிகள் முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசிப்பதாகவும், இந்த சிறுவர் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் […]

இலங்கை செய்தி

13 ஆவது திருத்தம் குறித்து பேசுவதற்காக மகாநாயக்க தேரர்களை சந்திக்க தயாராகும் தமிழ்த்தரப்புகள்!

  • April 11, 2023
  • 0 Comments

அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவொன்று இதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதுடன் பதிலுக்காக காத்திருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்தமதகுருமார்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஜனாதிபதி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து பேசுவதை நிறுத்தியுள்ளார் என சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.