ஐரோப்பா

ரஷ்ய-அமெரிக்க நல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சி – புட்டின் விடுத்த எச்சரிக்கை

  • March 1, 2025
  • 0 Comments

தமது நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுவதைக் குலைக்க முயல்வோருக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணுவாற்றல் வாய்ந்த இரு பெரும் நாடுகளுக்கு இடையே இதமான உறவு நீடிப்பதை எல்லா நாடுகளும் விரும்புவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க – ரஷ்ய பிரநிதிகள் துருக்கியில் சந்தித்த வேளையில் புட்டின் அவ்வாறு கூறினார். உக்ரேன் விவகாரம் பேசப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர். மாறாக இருதரப்பு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். வாஷிங்டனிலும் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

மூடுவிழா காணப்போகும் Skype!

  • March 1, 2025
  • 0 Comments

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரபலமான வீடியோ கால் செயலி ஸ்கைப் (Skype) வரும் மே மாதத்துடன் மூடுவிழா காண உள்ளதாக கூறப்படுகிறது. 2003 ஆண்டு வாய்ஸ் கால் செயலியாக அறிமுகமான ஸ்கைப்பை, 2011ஆம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கையகப்படுத்தியது. வீடியோ கால் செயலியாக பரிணமித்த ஸ்கைப், மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. ஸூம் (Zoom) உள்ளிட்ட செயலிகளின் வருகையால் ஸ்கைப்பின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், ஸ்கைப் செயலியை நிரந்தரமாக மூட மைக்ரோசாஃப்ட் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டு

குறுக்கே வந்த மழை – அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!

  • March 1, 2025
  • 0 Comments

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. லாகூர் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். மழையால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில், 4 புள்ளிகளை அடைந்த குரூப் B பிரிவில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது. தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவி வழங்கும் IMF

  • March 1, 2025
  • 0 Comments

இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று ஆராய்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் கடனுதவி 1.3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கிறது. இந்தநிலையில், சமூக […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

மெக்சிகோவில் மன உளைச்சலில் யானை – முதல் முறையாக நீதிமன்றம் விடுத்த உத்தரவு

  • March 1, 2025
  • 0 Comments

மெக்சிகோவில் முதல் முறையாக யானை ஒன்றின் உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளுமாறு விலங்கியல் தோட்டத்துக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Ely என்ற ஆப்பிரிக்க யானைக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்க்கஸ் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட Ely கடந்த 13 ஆண்டுகளாக San Juan de Aragon விலங்கியல் தோட்டத்தில் வாழ்ந்து வருகிறது. Ely நீண்டகாலமாக மன உளைச்சலில் வாழ்ந்துவருவதாக வழக்கறிஞர்கள் கூறினர். அதனுடன் வசித்த Maggie என்ற யானை 2016இல் மடிந்த பிறகு Ely மனநலம் பாதிக்கப்பட்டதாக அவர்கள் வாதாடினர். அது […]

பொழுதுபோக்கு

இலங்கையின் பிரபல நடிகை திடீர் மரணம்

  • March 1, 2025
  • 0 Comments

இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார். இவர் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார்.

ஐரோப்பா

ஜெர்மனியில் புகலிடம் கோருவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

  • March 1, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் புகலிடம் கோரும் உளவியல் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களில் மூன்றில் ஒருவர் உளவியல் ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் பிரச்சினைகளுக்கான சாத்தியமான தீர்வுகள் மற்றும் வன்முறை தொடர்பான கவலைகள் அவர்களிடம் இருப்பதாக ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் உளவியல் நிபுணர்களுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களை உளவியல் சிகிச்சை வழங்குவதில் அரசாங்கம் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது. இவ்வாறிருக்க, ஜெர்மனியின் இடதுசாரி அரசியல்வாதிகள் மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகளை ஆராய மறுப்பதாக […]

ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் விமானத்தில் பயணித்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • March 1, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய தம்பதியின் Qatar Airways விமானப் பயணம் சடலத்தால் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிட்செல்லும் ஜெ்னிஃபரும் மெல்பர்னிலிருந்து டோஹாவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களுக்கு அருகிலிருந்த பெண் பயணி எதிர்பாராவிதமாக உயிரிழந்துள்ளார. விமான ஊழியர்கள் பெண்ணின் சடலத்தைத் தம்பதியின் அருகே வைத்திருந்தனர். ஜெனிபர் இடம் மாறினார். ஆனால் மிட்செல்லுக்கு வேறு இடம் ஒதுக்கப்படவில்லை. எஞ்சிய விமானப் பயணம் முழுவதும் அவர் சடலத்திற்கு அருகே அமர்ந்திருந்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் பல இருக்கைகள் காலியாக இருந்தும்கூட விமான ஊழியர்கள் அவரது இடத்தை மாற்றவில்லை என்று […]

ஆசியா

பாகிஸ்தானில் அச்சுறுத்தும் இன்ப்ளூயன்ஸா – கடும் நெருக்கடியில் சுகாதார அமைப்பு

  • March 1, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்ப்ளூயன்ஸா வழக்குகள் கணிசமாக அதிகரித்து வருவதால், பாகிஸ்தானின் சுகாதார அமைப்பு மீண்டும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிகரித்து வரும் காய்ச்சல் நோயாளிகளை ஈடுகட்ட மருத்துவமனைகள் போராடி வரும் நிலையில், இந்த நெருக்கடி நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது, இதில் போதுமான சுகாதார வசதிகள் இல்லை, தயார்நிலை இல்லாமை மற்றும் பருவகால நோய்களைக் கையாள போதுமான வளங்கள் இல்லை. கடந்த சில மாதங்களாக, கராச்சியில் இன்ப்ளூயன்ஸா வழக்குகள் கடுமையாக அதிகரித்துள்ளன, காய்ச்சல் […]

உலகம் செய்தி

சீனாவில் நாயைப்போல் தோற்றமளிக்கும் வினோத மலை – பார்வையிட குவியும் மக்கள்

  • March 1, 2025
  • 0 Comments

சீனாவின் ஷங்ஹாயைச் சேர்ந்த வடிவமைப்பாளர் குவோ சிங்ஷான் எடுத்த புகைப்படம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாயைப்போல் தோற்றமளிக்கும் மலையை அவர் படத்தின்கீழ் “Puppy Mountain” என பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்துகொண்டதால் அந்த இடம் இப்போது சுற்றுப்பயணிகள் செல்லும் இடமாக மாறியுள்ளது. கடந்த மாத இறுதியில் ஹுபெய் மாநிலத்தில் அமைந்துள்ள யிச்சாங்கிற்கு குவோ சென்றிருந்தார். அங்கு அவர் எடுத்த படங்களை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தபோது குவோ ஒன்றைக் கவனித்தார். யாங்சி (Yangtze) ஆற்றோரம் இருக்கும் ஒரு மலையாகும். […]