மத்திய கிழக்கு

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுப் பயணிகளை வரவேற்கும் வடகொரியா

  • March 2, 2025
  • 0 Comments

வடகொரியா மீண்டும் சுற்றுப்பயணிகளை வடகொரியா வரவேற்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனங்கள் பயணிகளை வடகொரியாவிற்குக் கொண்டுசெல்லும் முதல் தரப்பாக உள்ளன. 12 சுற்றுப்பயணிகள் இந்த மாதம் 20ஆம் திகதி வடகொரியாவின் ரசொன் நகருக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு செய்திருக்கும் முதல் மேற்கத்திய சுற்றுப்பயணிகளாக அவர்கள் உள்ளனர். 4 நாள் பயணத்தில் பாடசாலைகள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வளாகங்கள் இருக்கும் சிறப்புப் பொருளியல் பகுதியை அவர்கள் பார்த்தனர். மேற்கத்திய சுற்றுப்பயணிகள் எல்லை தாண்டியிருந்தாலும் சீனக் குடிமக்களுக்கு இன்னமும் அனுமதி […]

வாழ்வியல்

மாரடைப்பு வருவதற்கு முன்பே தென்படும் அறிகுறிகள்..!

  • March 2, 2025
  • 0 Comments

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், பெரும்பாலான மக்கள் இதய நோய்களுக்கு ஆளாகின்றனர். அண்மைக் காலமாக மாரடைப்பு மூலமாக ஏற்படும் உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் கூட மாரடைப்பால் தங்கள் உயிரை இழக்கின்றனர். இதற்கு பல காரணிகள் சொல்லப்படுகிறது. ஆனால், மாரடைப்பு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே, மாரடைப்பு வருபவருக்கான உடலில் அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன. […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

அமெரிக்க வான்வெளியை ரஷ்ய விமானங்களுக்குத் திறக்குமாறு கோரிக்கை

  • March 2, 2025
  • 0 Comments

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமானச் சேவையை தொடங்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ரஷ்யா இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வான்வெளியை ரஷ்ய விமானங்களுக்குத் திறக்குமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது. இருநாடுகளின் அரசதந்திர உறவை மேம்படுத்துவது பற்றி அமெரிக்காவும் ரஷ்யாவும் சந்தித்துப் பேசின. முன்பு இருந்த அமெரிக்க நிர்வாகங்களோடு ரஷ்யா கொண்டிருந்த அதிருப்திகளைக் களைவதில் கவனம் செலுத்தப்பட்டதாக ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. உக்ரேனின் நட்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

புதிய வரி விதிப்பு அமல்: உலகப் பொருளாதாரத்தை ஆபத்திற்குள்ளாக்கும் டிரம்ப்

  • March 2, 2025
  • 0 Comments

மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளுக்கும் புதிய வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு பிப்ரவரியில் அமலுக்கு வருவதாக அறிவித்த நிலையில், மேலும் ஒருமாத கால அவகாசமும் வழங்கினார். இந்த நிலையில், மார்ச் 4 ஆம் […]

உலகம் செய்தி

மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் டிஜிட்டல் திரைகள் – எச்சரிக்கும் புதிய ஆய்வு

  • March 2, 2025
  • 0 Comments

ஒரு நாளைக்கு அதிக நேரம் டிஜிட்டல் திரைகளில் செலவிடுவது ஒரு நபரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது மூளையின் செயல்பாடு மற்றும் மன அழுத்தத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. டிஜிட்டல் திரைகளுக்கு முன்னால் இளம் பருவத்தினர் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் மன ஆரோக்கியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. படுக்கைக்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தொலைபேசிகள் அல்லது டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது […]

விளையாட்டு

செயற்கை நுண்ணறிவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்

  • March 2, 2025
  • 0 Comments

உலகத்தின் அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு எனக் கூறப்படும் ஏ.ஐ தான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் உலகையே ஆட்டிப்படைக்கும் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய 100 நபர்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. அந்த 100 பேர் அடங்கிய பட்டியலில் 13 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். தொழில்நுட்பம், அரசியல், கலை என பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இதில் இடம்பிடித்திருப்பது கூடுதல் சிறப்பம்சம். அந்த வகையில், அப்பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள் குறித்து பார்ப்போம். சுந்தர் […]

விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை – இந்தியா – நியூஸிலாந்து இன்று மோதல்

  • March 2, 2025
  • 0 Comments

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது. இவ்விரு அணிகளுமே ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டதால், இந்த ஆட்டத்தின் முடிவு எந்த அணிக்குமே தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை. இரு அணிகளுமே தங்களது முந்தைய இரு ஆட்டங்களில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கின்றன. எனவே, சமபலம் கொண்ட இரு அணிகள் மோதும் ஆட்டமாகவே இது இருக்கும். இந்திய அணியை பொருத்த வரை, இந்த ஆட்டத்தில் வென்றால் குரூப் ‘ஏ’-வில் முதலிடத்துடன் குரூப் சுற்றை நிறைவு […]

ஆசியா

உலகின் மிகச் சிறிய பூங்கா ஜப்பானில் – கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகம் அங்கீகாரம்

  • March 2, 2025
  • 0 Comments

ஜப்பானின் நகாய்சுமி நகரில் அமைந்துள்ள பூங்காவை உலகின் மிகச் சிறிய பூங்கா என கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகம் அங்கீகரித்துள்ளது இந்த பூங்கா 0.24 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அது A3 அளவுகொண்ட இரு தாளுக்குச் சமம் என்று கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு கூறியது. அந்த நகரில் மேற்கொள்ளப்பட்ட நிலச் சீரமைப்புப் பணிகளால் அவ்விடத்திற்குப் பலன் இல்லாமல் போனது. ஜப்பானிய நகரம் தொடர்ந்து அதனை உலகின் ஆகச் சிறிய பூங்காவாகக் கருதியதால் அண்மை […]

இலங்கை செய்தி

2030ஆம் ஆண்டிற்குள் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் – ஜனாதிபதி தகவல்

  • March 2, 2025
  • 0 Comments

இலங்கையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவம் 100,000 ஆகவும், கடற்படை 40,000 ஆகவும், விமானப்படை 18,000 ஆகவும் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசியப் பாதுகாப்பு தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றும் போது இதனை குறிப்பிட்டுள்ளார். பணிபுரிபவர்களின் அளவு குறைத்த போதிலும், அதனைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இராணுவமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இராணுவத்திற்குச் சொந்தமான ஏராளமான விமானங்கள், இராணுவ ஆயுதங்கள் மற்றும் கப்பல்கள் காலாவதியாகும் நிலையில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அச்சுறுத்தும் போலியோ வைரஸ்கள்- பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • March 2, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் ஒன்பது இடங்களில் உள்ள கழிவுநீரில் போலியோ வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்கள் கடுமையான ஆபத்தைக் குறிக்கின்றன என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தாலும், நோய்களைக் கண்காணிக்கும் முன்னணி அமைப்புகளான ரொபட் கோர்ச் நிறுவனம் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாடன்-வூர்ட்டம்பேர்க்கிலேயே போலியோ வைரஸ்கள் அதிகமாக இருப்பதை கழிவு நீர் சோதனைகள் இப்போது கண்டறிந்துள்ளன. போலியோவிற்கான கழிவுநீர் கண்காணிப்பு குறித்த ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, ரொபர்ட் கோச் நிறுவனம் […]