இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,866 ஆக உயர்வு
இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 114 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் 112 பேர், மேற்கு வங்காளத்தில் 106 பேர் மற்றும் டெல்லியில் 105 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். […]