இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் கடன் குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை அரசாங்கத்தின் நீண்ட காலக் கோரிக்கைக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் தொகையை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் ஒரு பிணையெடுப்பு (பெயில்-அவுட்) அல்ல. இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படுமே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படமாட்டாது. எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார […]

இலங்கை செய்தி

நாட்டை மேம்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூகத்தினருக்கு ஜனாதிபதி அழைப்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின்  ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை  கொண்டுச்  செல்லும் என எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை முன்னேற்றுவதற்கான  தொடர்ச்சியான  வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும்  இந்நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று  […]

இலங்கை செய்தி

எந்தவொரு தேர்தலையும் தேர்தல் ஆணைக்குழுவினால் தணித்து நடத்த முடியாது – நிமல் புஞ்சிஹேவா!

  • April 11, 2023
  • 0 Comments

எந்தவொரு தேர்தலையும் தேர்தல் ஆணைக்குழுவினால் தணித்து நடத்த முடியாது – நிமல் புஞ்சிஹேவா! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மாத்திரமல்ல எந்தவொரு தேர்தலையும் தேர்தல் ஆணைக்குழுவினால் தனித்து நடத்த முடியாது. அரசியலமைப்பு ரீதியில் தேர்தலுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எம் மீது […]

இலங்கை செய்தி

மொரட்டுவை சம்பவம் ; கைகள் இரண்டும் கடலில்.. கற்களுக்குள் கிடந்த கத்தி!

  • April 11, 2023
  • 0 Comments

மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தில் மின்னியலாளர் ஒருவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 36 வயதுடைய கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கை​களை துண்டாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட கத்தி, கைப்பற்றப்பட்டுள்ளது. ​எகொடஉயன மோசஸ் வீதியிலுள்ள கடற்கரையில் கற்களுக்கு இடையில் இருந்து இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளது என கல்கிஸை பிரிவின் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். துண்டாடப்பட்ட இரண்டு கைகளையும் அந்த இடத்திலேயே கடலில் வீசிவிட்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் […]

இலங்கை செய்தி

மனித உரிமைகள் குறித்து இலங்கை பிரதிநிதிகளுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்!

  • April 11, 2023
  • 0 Comments

மனித உரிமைகள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்கள் மற்றும் இனங்காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை, எகிப்து, பனாமா, பெரு, துர்க்மெனிஸ்தான் மற்றும் சாம்பியா தொடர்பான மனித உரிமை அறிக்கைகளை கருத்திற்கொண்டு தனது 137வது அமர்வு தொடர்பான இறுதி அவதானிப்புகளை முன்வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இலங்கையின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் சில பரிந்துரைகளை வழங்கி இருந்ததாகவும் […]

இலங்கை செய்தி

நீதித்துறையின் மீதான தலையீட்டை சகித்துக்கொள்ள முடியாது – கௌசல்ய நவரட்ண!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் சுயாதீனமாக செயற்படும் என அதன் புதிய தலைவர் கௌசல்ய நவரட்ண தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் சுயாதீனமாக செயற்படும் அரசமைப்பை மதிக்கும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நீதித்துறையின் மீதான எந்த தலையீட்டையும் சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பது ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமான அம்சம் என குறிப்பிட்டுள்ள அவர் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள படி இலங்கைசட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் மனித உரிமைகளை பாதுகாக்கும் […]

இலங்கை செய்தி

புத்தாண்டை முன்னிட்டு இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அனுமதி!

  • April 11, 2023
  • 0 Comments

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எந்தவொரு பகுதியிலும் வீதியின் இருமருங்கில் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதியளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தகவலை அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். பிரதேச செயலகங்களில் அறிவித்த பின்னர் இடையூறின்றி தங்களது உற்பத்திகளை வீதியின் இருமருங்கிலும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம்

  • April 11, 2023
  • 0 Comments

நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்று அதனை செலுத்த முடியாத சுமார் ஆயிரம் பேரிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கடன் நிவாரண சபை திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டளவில் ஐம்பத்தைந்து வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வந்ததாக இலங்கை மத்திய […]

இலங்கை செய்தி

இலங்கை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 60 சதவீதத்துக்கு மேல் பாடசாலைக்கு மாணவர்கள் வர முடியாத காரணத்தால் இந்த வருடத்தில் அதிக விடுமுறை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார். பாடசாலைகளில் முதலாம் தவணை பொதுவாக ஜனவரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கொரோனா காரணமாக தாமதமான கால அட்டவணையை தாங்கள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோருக்கு முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. முதற்தடவையாக அல்லது பதிவுகளை புதுப்பிக்க இந்த இணையத்தளத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.slbfe.lk எனும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் Online Self Registration எனும் பகுதிக்குள் பிரவேசித்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய தரவுகள் தொடர்பான விபரங்களையும் இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]