இலங்கை செய்தி

ஐரோப்பிய நாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை வந்த ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளிகப்பட்டுள்ளது. காலி – ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலுள்ள உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளர். இது தொடர்பில், அதன் ஊழியரான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 65 வயதான சுற்றுலாப் பயணி ஹபராதுவ காவல்நிலையத்துக்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உடற்பிடிப்பின்போது, சந்தேகநபரான ஊழியர் தமது அந்தரங்க பாகங்களை ஸ்பரிசம் செய்ததாக குறித்த பெண் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். சந்தேக […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் பெண் ஒருவரின் அதிர்ச்சி செயல்

  • April 11, 2023
  • 0 Comments

கிளிநொச்சியில் 54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னை நீராவி பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்ட பொலிசார் வீதிச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, பொதி செய்யப்பட்ட கசிப்பினை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு வேறொரு பகுதிக்கு கொண்டு சென்ற பொழுது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 54 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பினை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன […]

இலங்கை செய்தி

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற தயாராகும் ஹேமா பிரேமதாச

  • April 11, 2023
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாச, அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைக்கத் தயாராக உள்ளார். தனது தாயார் ஏற்கனவே அந்த வீட்டைப் பயன்படுத்துவதில்லை எனவும், தானும் சிந்தித்து அரசிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார். தனது தாயார் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்ததில்லை என்றும் தனியொரு வீட்டில் வசிப்பதாகவும் கூறும் எதிர்க்கட்சித் தலைவர், தந்தையின் ஓய்வூதியத்தை தாய் பெறுவதாகவும் குறிப்பிடுகின்றார். இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற […]

இலங்கை செய்தி

நட்டஈட்டை வழங்குவதற்காக நண்பர்களிடம் பணம் வசூலிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

  • April 11, 2023
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது கூட்டாளிகளிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உரிய நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்படாவிட்டால், நீதிமன்றம் தன் மீது என்ன முடிவு எடுக்கும் எனத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். “நான் உலகை […]

இலங்கை செய்தி

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவை ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பம்

  • April 11, 2023
  • 0 Comments

காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான உத்தேச படகுச் சேவை தொடர்பான கலந்துரையாடல் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இலங்கை துறைமுக அதிகாரசபை, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், இலங்கை […]

இலங்கை செய்தி

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள விசேட சுற்றறிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் பணத்தின் ஒரு பகுதி அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார் மயமாக்க அரசு திட்டம்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை சங்க தலைவர் ஜகத் விஜேகுணவர்தன  தெரிவித்துள்ளார். துறைமுகம்,  மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளின் தொழிற்சங்க தலைவர்களுடன் இன்று  கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கை காரணமாக   6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்புக்களை இழப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டுத்தாபனம் கடந்த ஜனவரி மாதம் […]

இலங்கை செய்தி

இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு கடனை பெறும் இலங்கை

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை இந்தியாவிடம் இருந்த வெளிநாட்டு நிதி பரிமாற்ற வசதியின் கீழ் புதிய கடனை பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் சிரேஷ் பொருளாதார நிபுணருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் வங்கி கல்வி மத்திய நிலையம் ஒழுங்கு செய்த விரிவுரை ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவிடம் இருந்து பெறும் இந்த கடனை இந்திய ரூபா நாணய அலகுகளில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதகவும் கடன் […]

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் கடன் குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை அரசாங்கத்தின் நீண்ட காலக் கோரிக்கைக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் தொகையை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் ஒரு பிணையெடுப்பு (பெயில்-அவுட்) அல்ல. இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படுமே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படமாட்டாது. எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார […]

இலங்கை செய்தி

நாட்டை மேம்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூகத்தினருக்கு ஜனாதிபதி அழைப்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின்  ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை  கொண்டுச்  செல்லும் என எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை முன்னேற்றுவதற்கான  தொடர்ச்சியான  வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும்  இந்நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று  […]