செய்தி தமிழ்நாடு

இந்தியாவில் வேகமாக பரவும் இன்புளுயன்சா வைரஸ் : புதிய சுகாதார வழிக்காட்டல் வெளியீடு!

  • April 14, 2023
  • 0 Comments

தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 3 வகையான இந்த வைரசால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த வைரசை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தமிழக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அந்தவகையில் இந்த வகை வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதையும், குடும்பத்தினரிடம் நெருக்கமாக இருப்பதையும் தவிர்க்க வேண்டும். […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தை கடந்த 24ம் திகதி இரவு கடுமையான சூறாவளி சூறையாடியது. மணிக்கு சுமார் 320 கிமீ வரை வீசிய சூறாவளியால் கர்ரோல், ஹம்ப்ரீஸ், மன்ரோ மற்றும் ஷார்கி போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலரும் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். இந்த சூறாவளியால் பல வீடுகள், வணிக வளாகங்கள் தரைமட்டமாகின. மிசிசிபி மாகாணத்தில் சூறாவளிக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். தற்போது அங்கு மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடந்து […]

செய்தி தமிழ்நாடு

2,600 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்றது தமிழ் சமூகம்

  • April 14, 2023
  • 0 Comments

மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 7 நாட்கள் நடைபெறும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை தொடக்க விழாவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர், நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேசுகையில் எனது தாய்மொழி மலையாளம், ஆனால் நான் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன், தமிழ்நாட்டில் பணியாற்றுவது எனக்கு கிடைத்த வரப்பிரசாதம், இளந்தமிழர் […]

செய்தி தமிழ்நாடு

விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ மாணவிகள்

  • April 14, 2023
  • 0 Comments

கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையிழக்கும் அபாயம் கொண்ட கிளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கு துவக்க நிலையிலேயே  உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும். இது குறித்து மக்களிடையே உணர்த்தும் பொருட்டு  ஒவ்வொரு ஆண்டும் உலக கண் அழுத்த நோய் வாரம் மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ,இதனை முன்னிட்டு,கோவையில் கல்லூரி மாணவ,மாணவிகள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் இருந்து தப்பியோடிய புலிகள்

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் உள்ள ஒரு விலங்கு பூங்காவில் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தைத் தொடர்ந்து இரண்டு புலிகள் தப்பி ஓடியதால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, இரண்டு புலிகளும் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக மீண்டும் ஒரு பாதுகாப்பான உறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. புலிகள் தப்பியோடியமை குறித்து ட்ரூப் கவுண்டியில் உள்ள Pine Mountain Animal Safari இல் இருந்து சனிக்கிழமையன்று பொலிஸாருக்கு தகவல்  வழங்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் புலியை கண்காணிக்கும் போது உள்ளூர்வாசிகள் உள்ளே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டனர். இந்தச் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட இளைஞர்

சனிக்கிழமை இரவு கனடாவில் கீலே subway நிலையத்தில் ஒரு இளைஞனுக்கு எதிரான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் 22 வயது இளைஞன் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு முன்னதாகவே நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. அந்த இளைஞர் ரயில் நிலையத்தின் கீழ் மட்டத்தில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தபோது, ஒரு நபர் அவரை அணுகி கத்தியால் குத்தியதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர். தீவிரமான காயங்களுடன் அந்த இளைஞனை துணை […]

செய்தி தமிழ்நாடு

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

  • April 14, 2023
  • 0 Comments

காஷ்மீரின் பல இடங்களில், பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் சோபியான், புல்வாமா மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களில், காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட இன மக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தோரின் சைபர் தாக்குதல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

செய்தி தமிழ்நாடு

மெத்தனப்போக்குடன் இருந்த காவல்துறை

  • April 14, 2023
  • 0 Comments

டாஸ்மாக் அனைத்து சங்க தோழர்களும் ஒன்று கூடுவோம்  சென்னை மாவட்டங்களில்  காலை கடை திறக்காமல்   டாஸ்மாக் தலைமை அலுவலகம்  (மேலாண்மை இயக்குனர்  அலுவலகம்) முன்பாக  அஞ்சலி செலுத்துவோம். சிவகங்கை  மாவட்டத்தில்  சமூக விரோதிகளின் கொலை பசிக்கு  ஆளான  விற்பனையாளர் தோழர் அர்ஜுனன்  குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசே டாஸ்மாக் நிர்வாகமே  பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பலியான  விற்பனையாளர் அர்ஜுனன் குடும்பத்தாருக்கு ரூபாய் 50 லட்சம்  நஷ்ட ஈடு வழங்கு. அவர் குடும்பத்தில் ஒருவருக்கு […]

செய்தி தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீச்சு

  • April 14, 2023
  • 0 Comments

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம்(TNTSWA) சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் திரு அர்ஜுன் அவர்கள் 03/03/23 அன்று சமூக விரோதிகளால்  பெட்ரோல் குண்டு வீச்சிக்கு  தாக்குதலாகி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று(15/03/23) இயற்கை  எய்தினார் என்ற செய்தியை கேட்டு மிகவும்  வருந்துகிறோம் இந்த தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள்  நலச் சங்கம்(TNTSWA) சார்பாக 08/03/23 அன்று மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் திரு.கு.பாரதி […]

செய்தி வட அமெரிக்கா

2024 அதிபர் தேர்தலுக்கு தயாராகிய டிரம்ப்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை குறிவைத்து, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வாகோ நகரில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தலுக்கு முந்தைய பிரச்சார பேரணியை நடத்தினார். இதன்போது பேசிய அவர், மிருகத்தனமான சதிகளுக்கு பலியாகி விட்டதாக கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ட்ரம்ப் உத்தியோகபூர்வ அறிவித்த பின்னர் அவர் ஏற்பாடு செய்திருக்கும் முதலாவது பிரசாரக் கூட்டம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தன்னை கைது செய்ய பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் […]