ஐரோப்பா செய்தி

அமெரிக்காவுடனான உறவு வருந்ததக்க நிலையில் உள்ளது – டிமிட்ரி பெஸ்கோவ்!

  • April 14, 2023
  • 0 Comments

அமெரிக்காவுடனான உறவு வருந்ததக்க நிலையில் இருப்பதாக கிரெம்ளின் கூறியுள்ளது. வொஷிங்டனின் உளவு ட்ரோன் ஒன்றை மொஸ்கோ நேற்று கருங்கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிரெம்ளின் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவுடனான உயர் மட்ட தொடர்பு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ரஷ்யா ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட மறுக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தி தமிழ்நாடு

5 ஏக்கர் தைல மர தோட்டத்தில் திடீர் தீ விபத்து

  • April 14, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா தச்சங்குறிச்சி சவேரியார்பட்டியில் சைவராஜ் சாரதா அந்தோனிசாமி செல்வம் என்ற நால்வருக்கு சொந்தமான 5 ஏக்கர் தைலமரத் தோட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தீ மள மளவென பற்றி எரியத் தொடங்கின. தைல மரத் தோட்டத்தின் வழியாக சென்ற அப்பகுதியை சேர்ந்த அருள்ரோஜ்மேரி இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தகவலறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து சென்ற சிவக்குமார் தலைமையிலான கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினர் இலை […]

ஐரோப்பா செய்தி

கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபடும் முக்கிய நாடுகள்!

  • April 14, 2023
  • 0 Comments

சீனா, ஈரான், மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்றினைத்து கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. இந்த வாரத்தில் ஓமன், வளைகுடாவில் மூன்று நாடுகளின் கடற்படைப் படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் படையெடுப்பின் போது சீனாவும் ஈரானும் ரஷ்யாவுடன் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன, உக்ரேனிய பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் மொஸ்கோவிற்கு சொந்தமானவை என்றும் குற்றம் சாட்டியுள்ளன. பெய்ஜிங் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றாலும், போரை வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்ற […]

ஐரோப்பா செய்தி

இராணுவ நடவடிக்கையை இழிவுப்படுத்துபவர்களின் குடியுரிமையை பறிக்கும் ரஷ்யா!

  • April 14, 2023
  • 0 Comments

கிரெம்ளினின் இராணுவ நடவடிக்கையை இழிவுப்படுத்துபவர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய சட்டங்களின் படி ரஷ்யாவில் இராணுவ நடவடிக்கையை இழிவுப்படுத்தும் படி கருத்து தெரிவிப்பவர்களின் குடியுரிமை பறிபோகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரியில் உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் கிரெம்ளின் அதன் குடிமக்களுக்கு வழங்கிய பேச்சு சுதந்திரக் கட்டுப்பாடுகளில் சமீபத்திய சட்டங்களும் இணைகின்றன. முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை போர், படையெடுப்பு, தாக்குதல் என விமர்சிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ரஷ்யாவின் இந்த […]

ஐரோப்பா செய்தி

உக்ரேனிய குழந்தைகளை நீரில மூழ்கடிக்க வேண்டும் – ரஷ்ய தொலைக்காட்சியில் முழக்கம்!

  • April 14, 2023
  • 0 Comments

உக்ரேனிய குழந்தைகளை நீரில் மூழ்கடிக்க வேண்டும் என ரஷ்ய அரசு ஊடகம் தனது குடிமக்களுக்கு கற்பித்து வருவதாக ஐ.நா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை சாதாரணமானது என நம்புவதற்கு ரஷ்யா அந்நாட்டு மக்களை கற்பிக்கிறது. இது காலாச்சாரத்திற்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும் என வரலாற்று பேராசிரியர் திமோதி ஸ்னைடர் கூறியுள்ளார். உக்ரைன் மீது படையெடுப்பதன் மூலம் 7 இலட்சத்து 50 ஆயிரம் மக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதேநேரம் போர் […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் மருந்தகங்களில் இருந்து திரும்பப் பெறப்படும் 15ற்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள்

  • April 14, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் 15க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள ஒரு உட்பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில இருமல் மருந்துகளில், இருமலைக் கட்டுப்படுத்துவதற்காக pholcodine என்னும் ஒரு பொருள் சேர்க்கப்படுகிறது.இந்த pholcodine, சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலருக்கோ அறுவை சிகிச்சைக்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம்.ஆகவேதான் இந்த மருந்துகள் திரும்பப்பெறப்படுகின்றன. அவற்றை வாங்கியுள்ள மக்கள் மருந்தகங்களை அணுகி அவற்றிற்கு பதிலாக மாற்று மருந்துகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். கீழ்க்கண்ட மருந்துகளில் pholcodine உள்ளது: […]

செய்தி தமிழ்நாடு

லாரியும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி

  • April 14, 2023
  • 0 Comments

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக ஓம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்து வந்தனர். இதேபோன்று மரக்கட்டைகளை லாரியில் ஏற்றுக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்றபோது திருச்சி மாவட்டம் நம்பர் 1டோல்கேட் அடுத்து திருவாசி அருகே அதிகாலை 3.50மணிக்கு எடப்பாடியில் இருந்து வந்த ஆம்னி வேணும், லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை, […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்காவின் ட்ரோனை தாக்கிய ரஷ்யா : மேற்கு நாடுகளுடன் நேரடியாக மோதும் மொஸ்கோ!

  • April 14, 2023
  • 0 Comments

சர்வதேச வான்வெளியை மதித்து நடக்குமாறு இங்கிலாந்து வலியுறுத்தியுள்ளது.   அமெரிக்காவின் ஆளில்லா விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியமைக்கு ரஷ்யா காரணமாக அமைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார்.    இது குறித்து டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர், எல்லா தரப்பினரும் சர்வதேச வான்வெளியை மதிக்கிறார்கள். ரஷ்யாவையும் அவ்வாறு நடந்துகொள்ளுமாறு வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்தார்.    இந்த சம்பவத்தில் ரஷ்ய சு-27 போர் விமானம் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று!

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நேற்றைய தினம் வழங்கப்பட்டிருக்கும் அரச தகவல்களுக்கமைய,நாளுக்குச் சராசரி 10.000 பேரிற்குக் கொரோனாத் தொற்று ஏற்படுகின்றது. நேற்றைய தினம் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய, 9.937 பேரிற்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 127.326 பேர் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர். நேற்று 27 பேர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனுடன் சேர்த்து பிரான்சில் கொரோனாத் தொற்றினால் 165.267 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனாத் தொற்றினால் 13.281 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 760 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் […]

செய்தி தமிழ்நாடு

செல்போனை பிடுங்கி கட்சி நிர்வாகிகளிடம் கொடுத்த அமைச்சர் நாசர்

  • April 14, 2023
  • 0 Comments

திருவேற்காடு நகராட்சிககுட்பட்ட பகுதியில் பூங்காவிற்கு பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பூங்கா பணிகள் தொடங்க பூமி பூஜை துவங்கி வைத்தார். பின்னர் பூஜை செய்து தீபாராதனை காட்டியபோது அருகே இருந்த திருவேற்காடு நகரமன்ற தலைவர் மூர்த்தி அவரது செல்போனில் பேசி கொண்டிருந்ததை கண்டு அமைச்சர் கோபம் அடைந்து நகரமன்ற தலைவரஜ் எச்சரித்தார். மீண்டும் நகர மன்ற தலைவரிடம் இருந்த செல்போனை அமைச்சர் செல்போனை பிடுங்கி அருகே […]