ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு!

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட உள்ளது. பணவீக்கம் காரணமாக அதிகளவு மின்சாரக்கட்டணத்தை எதிர்கொண்ட குடும்பங்களுக்கே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் அதிகளவு மின்சாரக்கட்டணத்தை எதிர்கொண்ட குடும்பங்களுக்காக இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. மொத்தமாக 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவானது 48 யூரோக்களில் இருந்து 200 யூரோக்கள் வரை (பயன்பாட்டுக்கு ஏற்றது போல்) வழங்கப்படும் என […]

ஐரோப்பா செய்தி

புட்டினுக்கு கைது உத்தரவு – உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரமாக்கும் ரஷ்யா

  • April 14, 2023
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கைது செய்ய உத்தரவிட்டதனையடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரமாக்கி உள்ளது. டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் -ரஷ்யா போரானது ஓரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. உக்ரைனில் இருக்கும் குழந்தைகள் ரஷ்யாவிற்கு நாடு கடத்தியதாக கூறப்படும் போர் குற்றத்திற்காக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா லவோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக கைது உத்தரவு […]

ஐரோப்பா செய்தி

2ஆம் உலகப் போரின்போது ஜெர்மனியால் வைக்கப்பட்ட கடல் கண்ணிவெடி தகர்ப்பு

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மன் படைகளால் கடலுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 690 கிலோ எடைகொண்ட கடல் கண்ணிவெடி தகர்க்கப்பட்டது. குரோஷியாவில், இரண்டாம் உலகப் போரின்போது இந்த கடல் கண்ணிவெடி வைக்கப்பட்டுள்ளது. ரிஜேகா துறைமுகத்தில் உள்கட்டமைப்பு பணிகளின்போது இந்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டது. சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, சிறப்பு காவல்படை பிரிவினரால் தகர்க்கப்பட்டது.  

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் பிரித்தானியர்களை விட சிறந்து விளங்குகின்றனர்

  • April 14, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இன சமூகங்கள் மிக உயர்ந்த கல்வி நிலைகளைக் கொண்டுள்ளனர் மற்றும் வேலை செய்யும் தொழில் வல்லுநர்களின் அதிக சதவீதத்தில் ஒருவராக உள்ளனர். 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின் சமீபத்திய தரவு இதனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 2021 இங்கிலாந்து மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்திய இனத்தைச் சேர்ந்தவர்கள் சொந்தமாக வீடு வைத்திருப்பதாகக் காட்டுகிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சீன சமூகத்துடன் சேர்ந்து, இந்தியர்கள் மிக […]

ஐரோப்பா செய்தி

ஒரே பாலின பெற்றோர் மீதான தடை; இத்தாலியில் வெடித்த போராட்டம்

  • April 14, 2023
  • 0 Comments

இத்தாலியில் ஒரே பாலின பெற்றோர்கள் மீதான தடையை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி தலைமையிலான புதிய வலதுசாரி அரசாங்கத்தின் ஒரே பாலின பெற்றோரின் உரிமைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக சனிக்கிழமையன்று நூற்றுக்கணக்கானோர் மிலனில் ஆர்ப்பாட்டம் செய்தனர். Hands Of Our Sons and Daughters என்று அழைக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டம் வரலாற்று சிறப்புமிக்க Piazza della Scala பாதசாரி சதுக்கத்தில் நடைபெற்றது மற்றும் நாடு முழுவதும் LGBTQ+ குழுக்களால் ஏற்பாடு […]

ஐரோப்பா செய்தி

கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்ட புடின்!

  • April 14, 2023
  • 0 Comments

ரஷ்ய ராணுவம் பற்றிய தவறான தகவல்களை வெளியிடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் திருத்தம் செய்து கையெழுத்திட்டார். ரஷ்யாவில் அதிகாரப்பூர்வ ஆயுதப்படைகள் குறித்து அவதூறு மற்றும் தவறான தகவல்கள் வெளியிடுவோருக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் போலி செய்திகளை பரப்பும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப்படைகளின் முன் அமைக்கப்பட்ட பணிகளை முடிக்க உதவும் தன்னார்வ பட்டாலியன்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்கள் ஆகியோருக்கு எதிராக போலி செய்தி வெளியிடுபவர்களும் […]

ஐரோப்பா செய்தி

மெலிடோபோலை தலைநகராக அறிவிக்க திட்டமிடும் ரஷ்யா!

  • April 14, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோர்ஷியா பகுதியில் உள்ள அதிகாரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட மெலிடோபோலை, பிராந்தியத்தின் தலைநகராக அறிவிக்கும் ஆணையை வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ரஷ்யாவால் நிறுவப்பட்ட பிராந்தியத்தின் தலைவர் எவ்ஜெனி பாலிட்ஸ்கி, சபோரிஜியா நகரம் ரஷ்யாவால் கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை தற்காலிக நடவடிக்கை என்று கூறியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யா ஜனாதிபதி புடின், நான்கு உக்ரேனிய பகுதிகளை ரஷ்யாவிற்குள் உள்வாங்கும் சட்டங்களில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

முதல் முறையாக உக்ரைன் எல்லைக்குள் சென்ற ரஷ்ய அதிபர் புதின் – மரியுபோல் நகரில் ஆய்வு

  • April 14, 2023
  • 0 Comments

முதல் முறையாக உக்ரைன் எல்லைக்குள் சென்ற ரஷ்ய அதிபர் புதின் – மரியுபோல் நகரில் ஆய்வு

ஐரோப்பா செய்தி

புடினுக்கு எதிரான கைது நடவடிக்கை தொடர்பில் ஜேர்மன் வெளியிட்டுள்ள கருத்து!

  • April 14, 2023
  • 0 Comments

ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், பல தலைவர்கள் ICCயின் முடிவை வரவேற்றுள்ளனர். உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தி ரஷ்ய தலைவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ICC குற்றம் சாட்டி, பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த வாரண்ட் மூர்க்கத்தனமானது , அர்த்தமற்றது என்று கிரெம்ளின் கூறியது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ICCயின் முடிவை […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் கற்கும் மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் – ஏற்பட்டுள்ள மாற்றம்

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் உயர்தர பரீட்சசையில் தோற்றாமல் மாணவர்கள் பல்கலைகழகங்களில் பயின்று வருவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெர்மனிய மாணவர்கள் கா பொ த உயர்தர பரீட்சை எழுதும் ஆர்வத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜெர்மனியில் பல்கலைகழகங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களில் கா பொ த உயர்தர என்று சொல்லப்படுகின்ற அபிடு என்று சொல்லப்படுகின்ற பரீட்சை செய்யாமலே பல்கலைகழகத்தில் படிக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி […]