செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குண்டுவெடிப்பின் பின்னணியில் உக்ரைன் உளவுத்துறை?
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குண்டுவெடிப்பின் பின்னணியில் உக்ரைனின் உளவுத்துறையினர் இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் டாஸ் செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள செய்தின்படி, குறித்த குண்டுவெடிப்பில் உக்ரேனிய புலனாய்வு அதிகாரிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கிரெம்ளின் எதிர்கட்சி பிரமுகர் அலெக்ஸி நவல்னியால் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையின் முகவர்கள் இந்த தாக்குதலை நடத்த உதவியதாக குற்றம் சாட்டியுள்ளனர். கிரெம்ளின் இந்த தாக்குதலை பயங்கரவாத செயல் என விமர்சித்துள்ளது.