ஐரோப்பா

ஸ்பெயினில் செங்குத்தாக தரையில் மோதிய போர் விமானம் (வீடியோ)

  • May 22, 2023
  • 0 Comments

ஸ்பெயின் நாட்டில் போர் விமானம் ஒன்று செங்குத்தாக தரையில் மோதி வெடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்-ல் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள ஜராகோசா விமான தளத்தில் F/A-18 ஹார்னெட் ரக போர் விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது. அதில், அமெரிக்காவின் வடிவமைப்பான F/A-18 ஹார்னெட் ரக போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக விமான […]

இலங்கை

இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

  • May 22, 2023
  • 0 Comments

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி,  ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 33.6 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி  மார்ச் மாதத்தில் பணவீக்கம் 49.2 சதவீதமாக பதிவாகி இருந்தது. மார்ச் மாதத்தில் 42.3 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம்  ஏப்ரலில் 27.1 சதவீதமாக குறைந்துள்ளது.  

இந்தியா

டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு!

  • May 22, 2023
  • 0 Comments

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாக இருக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். முன்னதாக அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.66 ஆக இருந்தது. இது  இனிவரும் காலங்களில், 82.80-82.84 ஆக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் ரூபாய் பணச் சந்தை விகிதங்கள் அதிக பணப்புழக்கம் காரணமாக கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா

மோடியின் காலைத்தொட்டு வணங்கிய பிரதமர் ஜேம்ஸ் மரபே

  • May 22, 2023
  • 0 Comments

பப்புவா- நியூகினிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, மோடியின் பாதங்களைத் தொட்டு வரவேற்பு அளித்துள்ளார். இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (FIPIC) மூன்றாவது உச்சிமாநாட்டையொட்டி இந்திய பிரதமர் மோடி , நேற்று (21) பப்புவா நியூ கினியா சென்றடைந்தார்.இதனூடாக பப்புவா கியூகினி நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் மோடியை பெற்றுள்ளார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாட்டிற்கு வரும் எந்தத் தலைவருக்கும் பப்புவா நியூ கினியில் வழக்கமாக […]

அறிவியல் & தொழில்நுட்பம் ஐரோப்பா

மெட்டா (Meta ) நிறுவனத்திற்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம்!

  • May 22, 2023
  • 0 Comments

மெட்டா (Meta ) நிறுவனத்திற்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள அதன் முன்னணி தனியுரிமை கட்டுப்பாட்டாளரால் மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனர் தவல்களை தவறாக கையாண்டமைக்காக மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், பயனர்களி்ன் தரவுகளை அமெரிக்காவிற்கு மாற்றுவதை நிறுத்த ஐந்து மாதங்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அயர்லாந்தின் தரவுப் பாதுகாப்பு ஆணையர் (டிபிசி) விதித்த அபராதம், மெட்டாவின் தனிப்பட்ட தரவைத் தொடர்ந்து மாற்றுவது தொடர்பானது.

இலங்கை

தன் குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்த தந்தை!

  • May 22, 2023
  • 0 Comments

தன்னுடைய மூன்று வயதான குழந்தை தூக்கி, நிலத்தில் தலைகீழாக அடித்த தந்தையை கைது செய்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை இஹல தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்த மேற்படி நபர், மனைவியின் முன்பாக சென்று நஞ்சருந்தியுள்ளார். அதன்பின்னர் சந்தேகநபரையும் குழந்தையையும் பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அடிப்படை சிகிச்சையை பெற்றுக்கொண்டதன் பின்னர் வைத்தியசாலையில் இருந்து சந்தேகநபர் தப்பியோடியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த குழந்தையின் தலை பிளந்து […]

இலங்கை

03 நாட்களுக்குகள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை விரைவில் அமுலுக்கு வரும்!

  • May 22, 2023
  • 0 Comments

03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்கும் வகையில் மேலும் 50 இடங்களை இணைத்து இதனை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இதேவேளை, இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை இன்று அழைக்கப்படவுள்ளதாகவும், […]

இலங்கை

அரசியல் வாதிகளின் வீடுகள் எரிக்கப்பட்டது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது!

  • May 22, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறுகோரி அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்டோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (22) வாபஸ் பெறப்பட்டது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது  பொது பாதுகாப்பு அமைச்சர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல்,  நடந்த சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த நடவடிக்கை […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகர் சரத் பாபு உயிரிழந்தார்

  • May 22, 2023
  • 0 Comments

நடிகர் சரத் பாபு உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தன. 72 வயதான நடிகர் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கி மூலம் ரஷ்ய எதிர்ப்பு வெறியை தூண்டிவிட்டார்கள் – ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு

  • May 22, 2023
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை அழைத்து, G7 மாநாட்டை பிரச்சார நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்கள் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார். அங்கு அவர் பிற நாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரினார்.அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தலைவருக்கும் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜி7 தலைவர்களை குற்றம்சாட்டியுள்ளது. குறித்த அறிக்கையில், ‘G7யின் தலைவர்கள் தாங்கள் கட்டுப்படுத்தும் கீவ் ஆட்சியின் தலைவரை, தங்கள் கூட்டத்திற்கு […]